ஞாயிறு, 13 நவம்பர், 2011
Posted on 1:36 AM by piragasart
| கூகுள் பிளஸ் page வசதியின் முக்கிய நோக்கம் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே கொண்டு செல்லல்.. |
பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ் இரண்டும் செயலில் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டவை. இதில் சற்று விதிவிலக்கு ட்விட்டர் தளம். பேஸ்புக் தளமும் கூகுள் பிளஸ் தளமும் ஒரே வசதிகளை மாறி மாறி தருகின்றன. பேஸ்புக் ஒரு வசதியை வெளியிட்டால் அந்த வசதியை கூகுள் பிளசும், கூகுள் பிளஸ் ஒரு வசதியை வெளியிட்டால் அந்த வசதியை பேஸ்புக் தளமும் மாறி மாறி வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் கூகுள் பிளசில் புதிய வசதியாக Page வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளனர். இந்த வசதி ஏற்கனவே பேஸ்புக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. |
பேஸ்புக் மற்றும் பிளசில் page வசதியின் முக்கிய நோக்கம் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே கொண்டு செல்ல தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இதனை பல்வேறு வகையில் அனைவரும் உபயோகப்படுதுகிறோம். கூகுள் பிளஸில் Page உருவாக்குவது எப்படி? முதலில் இந்த லிங்கில் செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களின் Page Category தேர்வு செய்து அதன் மீது கிளிக் செய்யுங்கள். அடுத்து உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் கூகுள் பிளஸ் Pageன் விவரங்களை கொடுக்கவும். விவரங்களை கொடுத்த பின்னர் CREATE என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் பக்கத்திற்கான Description மற்றும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து Continue என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது உங்களின் கூகுள் பிளஸ் Page தயாராகி விட்டது. அதை உங்கள் கூகுள் பிளஸ் Circle-ல் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கு வரும் விண்டோவில் உள்ள Share On Google Plus என்ற பட்டனை அழுத்தவும். (Share செய்ய விரும்பவில்லை என்றால் Finish பட்டனை கொடுத்து விடவும்). அவ்வளவு தான் உங்களுடைய Google plus Page உருவாகிவிட்டது. இது போன்று நீங்கள் எத்தனை Page வேண்டுமானாலும் உருவாக்கி கொண்டு உபயோகிக்கலாம். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply