| விண்டோஸ் போன்களுக்கான Skype பீட்டா பதிப்பு அறிமுகம் | |||
விண்டோஸ் இயங்குதளத்தில் மிகவும் வினைத்திறனுடன் தொழிற்படக்கூடிய இந்த புதுப்பதிப்பானது Nokia Lumia 710, Lumia 800, HTC Titan, Radar, Samsung போன்ற கருவிகளிலும் செயற்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். WiFi அல்லது 3G வலையமைப்பில் செயற்படக்கூடிய இதற்கு முந்திய பதிப்பானது வீடியோ அழைப்பு, ஒலி அழைப்பு ஆகியவற்றை மட்டுப்படுத்திய அளவிலேயே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த பீட்டா பதிப்பின் மூலம் வரையறை அற்ற வீடியோ, ஒலி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். ![]()
|
திங்கள், 27 பிப்ரவரி, 2012
Posted on 5:23 PM
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
பேஸ்புக்கிலும் வருகிறது Angry Birds விளையாட்டு இலவசமாக
கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல வெர்சன்கள் வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வர இருக்கிறது. வரும் காதலர் தினத்தன்று பேஸ்புக்கில் Angry Birds விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழலாம்.
மொபைலில் விளையாடும் Angry Birds விளையாட்டை விட பேஸ்புக்கில் வரப்போகும் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் ட்ரெயிலர் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
இனி நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே Angry Birds விளையாட்டை விளையாடி மகிழலாம்.
மொபைலில் விளையாடும் Angry Birds விளையாட்டை விட பேஸ்புக்கில் வரப்போகும் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் ட்ரெயிலர் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
Angry Birds விளையாட்டின் Angry Birds Facebook Page சென்று Like செய்தால் இந்த விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்க்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
Posted on 7:51 PM
| விண்டோஸ் 7 பக் அப் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:37.09 மு.ப GMT ] |
இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும். இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும். அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும். முதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும். |
Posted on 7:45 PM
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்றவிண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம். இன்ஸ்டால் செய்வது எப்படி:
போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசத |
| ] |
மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும். இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம். இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்படுத்த வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை. மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம். அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும். ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திடலாம். இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும். ஜிமெயில் வசதியை இணையதள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது. அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர் அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது. ![]() ![]() |
Posted on 6:48 AM
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
| கூகுள் பிளஸ் அறிமுகப்படுத்தியுள்ள 'Hangout' வீடியோ அழைப்பு.. |
சமூகவலைத்தளங்களின் போட்டியினால் கூகுள் பிளஸ் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் Hangout எனும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.முதலில் நேரடியாக Google+ Hangout மூலம் உங்கள் கூகுள் பிளஸ் வட்டத்திலுள்ளவர்களுடன் மட்டும் வீடியோ சட்டிங் செய்ய முடியாது. எனினும் இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இனந்தெரியாத 12 வரையானவர்களுடன் வீடியோ சட்டிங்கில் ஈடுபட முடியும். |
உங்கள் நண்பர்களுடன் Google+ Hangout ஐ பயன்படுத்தி வீடியோ சட்டிங்கில் ஈடுபட வேண்டுமாயின் Hangout நீட்சியை குரோமில் நிறுவ வேண்டும்.அவ்வாறு நிறுவியதும் addressbarல் நீல நிற icon ஒன்று தோன்றும். அதில் கிளிக் செய்வதன் மூலம் Google+ Hangout ஐ இயங்க செய்து அந்த நேரத்தில் ஓன்லைனில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுடன் சட்டிங்கில் இணைந்து கொள்ள முடியும். Google+ Hangout இன் நன்மைகள் 1. விரைவாக சட்டிங்கில் இணைந்து கொள்ள முடிதல். 2. அவசியமானவர்களின் வரிசையில் நண்பர்களை ஒழுங்குபடுத்த முடிதல். 3.வரையறை அற்ற, வரையறைக்கு உட்பட்ட ஓன்லைன் சட்டிங் நடவடிக்கைகளை அறியக்கூடியதாக இருத்தல். 4. பாதுகாப்பானதாக காணப்படுதல். |
Posted on 8:06 PM
கணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro மென்பொருள் இலவசமாக [worth $19.95]
கணினியில் தீங்கிழைக்கும் வைரஸ்கள், மால்வேர்கள் மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற கிளீனிங் மேன்போருட்கலோத் ஒப்பிடுகையில் 300% மேல் சிறப்பாக இயங்குகிறது. தேவையில்லாத Registry பைல்களை அழித்து சுத்தமாக்கி உங்கள் கணினியின் பழைய வேகத்தை கொண்டு வருகிறது. அதே சமயம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிமானவர்கள் இந்த மென்பொருளை உபயோகித்து கொண்டு உள்ளனர்.
இந்த பயனுள்ள மென்பொருளின் விலை $19.95 இந்திய மதிப்பில் Rs. 1000. ஆனால் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் முற்றிலும் இலவசமாக இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம். இந்த சலுகை இன்று ஒரு நாள் [Feb 14,0:00 - Feb 14, 24:00] மட்டுமே.
இலவச சலுகையை பெறுவது எப்படி:
முதலில் இந்த லிங்கில் Advanced SystemCare Pro கிளிக் செய்து சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய விண்டோ கீழேபடத்தில் இருப்பதை போல இருக்கும் அதில் உங்களுடைய பெயரையும், ஈமெயில் ஐடியும் கொடுத்து Send Gift என்ற பட்டனை அழுத்தவும்.

இலவச சலுகையை பெறுவது எப்படி:
முதலில் இந்த லிங்கில் Advanced SystemCare Pro கிளிக் செய்து சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய விண்டோ கீழேபடத்தில் இருப்பதை போல இருக்கும் அதில் உங்களுடைய பெயரையும், ஈமெயில் ஐடியும் கொடுத்து Send Gift என்ற பட்டனை அழுத்தவும்.
Send Gift பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்காக டவுன்லோட் விவரங்கள் உங்கள் eemeyilபொருளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே என்பதால் கூடிய விரைவில் டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
Posted on 1:01 AM
பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய(18-02-2012)இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது. இணையத்தில் இருந்து டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய உதவும் இலவச மென்பொருள் UTorrent ஆகும். இந்த மென்பொருளின் மூலம் டோரென்ட் பைல்களை வேகமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளில் டவுன்லோட் செய்யும் பொழுது பாதியில் நிறுத்தி பிறகு விட்ட இடத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம், மீடியா பைல்களை டவுன்லோட் செய்யும் பொழுதே பார்க்கலாம். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். மென்பொருளை டவுன்லோட் செய்ய - uTorrent 3.1.2 கணினி விண்டோக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க உதவும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளில் வெறும் ஸ்க்ரீன் ஷாட் வசதி மட்டுமின்றி Image Editor, Color Picker , White Board, Cross Hair மற்றும் பல வசதிகள் அடங்கி உள்ளது. இந்த மென்பொருளை உபயோகிப்பதும் மிகவும் சுலபமாக இருப்பதால் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Picpick 3.1.2 ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினியை கட்டுப்படுத்தவும், பைல்களை பரிமாறிக்கொள்ளவும், உதவும் பயனுள்ள இலவச மென்பொருள் Team viewer ஆகும். உலகம் முழுவதும் மிகவும் பரவலாக உபயோகப் படுத்தப்படும் மென்பொருளாகும். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - TeamViewer 7.0.12541 கணினியில் இருந்து குறைந்த செலவில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரின் தொலைபேசிக்கும் விருப்பம் போல் பேசி மகிழ மிகவும் பயனுள்ள இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளும் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த இலவச பயனுள்ள மென்பொருளின் புதிய பதிப்பு 5.6 அண்மையில் வெளியிடப்பட்டது. தற்பொழுது அடுத்த பதிப்பான 5.7 Beta வடிவில் வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 5.7.0உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாக இப்பொழுது உள்ளது. சமீப காலங்களில் பயர்பாக்ஸ் புதுப்புது வேர்சன்களை வெளியிட்டு கொண்டே உள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை மொசில்லா நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - Mozilla Firefox 10.0.2 இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து புதிய வசதிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு |
கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு(Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். வைரஸ் காரணமாக கணணி செயலிழக்கும் போதோ அல்லது கணணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும். அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தெரிவு செய்து கொள்ளவும். பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம். எளிமையான இந்த மென்பொருள் கணணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம், பென்டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம். |
Posted on 12:57 AM
வியாழன், 16 பிப்ரவரி, 2012
| பேஸ்புக்கின் புதிய Photo Viewer-ஐ மாற்றுவதற்கு | ||||||
| [ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:23.01 மு.ப GMT ] | ||||||
தற்போது பேஸ்புக் தளத்தில் புதிய Photo Viewer-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். இப்பொழுது பேஸ்புக்கில் ஏதாவது ஒரு புகைப்படத்தை ஓபன் செய்தால் சைட்பாருடன் கூடிய Pop-up விண்டோவில் புதிய Photo Viewer ஓபன் ஆகும். Lightbox வசதியில் புகைப்படம் ஓபன் ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு புதிய வசதி பிடிக்காததாலும் இந்த புதிய Photo Viewer-ஐ செயலிழக்க செய்யலாம். 1. இதற்கு முதலில் பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை ஓபன் செய்யுங்கள். அந்த புகைப்படம் பாப்-அப் விண்டோவில் புதிய photo Viewer தோற்றத்தில் ஓபன் ஆகி இருக்கும். இப்பொழுது அந்த இணைய பக்கத்தை பக்கத்தை Refresh அல்லது கீபோர்டில் F5 கொடுக்கவும். அந்த இணைய பக்கம் refresh ஆகி பழைய Classic Photo Viewer-ல் ஓபன் ஆகி இருப்பதை காணலாம். 2. புதிய Photo Viewer-ல் புகைப்படம் ஓபன் ஆகியதும் பிரவுசர் URL ல் உள்ள &theatre என்பதை அழித்து கீபோர்டில் Enter அழுத்துங்கள், பழைய தோற்றத்தில் புகைப்படம் ஓபன் ஆவதை காணலாம். 3. மேலே உள்ள இரண்டையும் விட இது சுலபமான வழி. பேஸ்புக்கில் ஏதாவது ஒரு புகைப்படத்தை ஓபன் செய்வதற்கு முன் உங்கள் கீபோர்டின் Ctrl கீயை அழுத்தி கொண்டு அந்த புகைப்படம் மீது கிளிக் செய்யுங்கள். அந்த புகைப்படம் தனி டேபில் பழைய Classic Photo Viewer-ல் ஓபன் ஆகும்.
|
Posted on 7:22 PM
திங்கள், 13 பிப்ரவரி, 2012
| உங்கள் காதலை அறிந்துகொள்ள புதிய மென்பொருள் |
இவர்களுக்காக இந்த காதலர் தினத்தில் புதிய இலவச மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபாட்களிலும், ஐபோன்களிலும் இயங்கக்கூடிய இம்மென்பொருள் 14 வகையான காதலை வெளிப்படுத்தும் தீம்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். Valentine's Day 2012: 14 best free apps for your love என பெயரிடப்பட்டுள்ள இந்த மென்பொருள் 20.3MB அளவை கொண்டுள்ளதுடன் ஆங்கிலம், சைனிஸ், பிரென்ச், ஜேர்மன், இத்தாலின், ஸ்பானிஸ், ஸ்வீடிஸ், ஆகிய மொழிகளிலும் கிடைக்கின்றது. ![]() ![]() |
Posted on 9:47 PM
| கிட்டார் இசைப்பிரியர்களுக்கு ஓர் தளம் |
அந்த வகையில் இவர்களுக்கு உதவுவதற்காக கிட்டார் கற்றுக் கொடுக்கும் தளம் ஒன்றினை அண்மையில் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மிகச் சிறந்த கிட்டார் இசைக் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டு, பாடங்களும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தரப் பட்டுள்ளன. Video Vault என்ற தலைப்பின் கீழ் கிளிக் செய்தால், இந்த பாடங்களுக் கான பைல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பாடமும் ஒரு வீடியோ பைலுடன் காட்டப்படுகிறது. நம் கையில் கிட்டாரினை வைத்துக் கொண்டு அதனை மீண்டும் மீண்டும் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றைப் பார்த்தவுடனேயே, இதனை மட்டுமே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி, கிட்டார் இசைக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என முடிவு செய்துவிடுவீர்கள் அல்லது இதில் தரப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் (FAQ)பிரிவினை முதலில் படிக்கலாம். இந்தப் பிரிவு, இணைய தளத்தின் மேல் வலது பக்கம் உள்ளது. பாடல்கள் இசைக்கும் வழிகள் எனப் பலவகை தலைப்புகளில் இந்த கேள்வி பதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் உங்களுக்கான இலவச அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு, இந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். நீங்களே ஒரு கிட்டார் இசைக் கலைஞராக இருந்தால், நீங்களும் சில பாடங்களுக்கான வீடியோ பைலை உருவாக்கி அப்லோட் செய்திடலாம். வீடியோ பாட பைல்கள் Instructional, Performance, Embedded, All Selections என்ற பிரிவுகளில் காட்டப்படுகின்றன. இதுவும் நமக்கு உதவியாய் உள்ளது. Gear reviews, tips and tricks, and guitar news ஆகிய பிரிவுகளில் கூடுதல் தகவல்களும், கிட்டார் இசைப்பதில் டிப்ஸ்களும் கிடைக்கின்றன. இசைக் கலைஞர்களுக்கு இது ஓர் சிறப்பான வழிகாட்டி. கிட்டார் இசைப்பதில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் ஒரு கலையைச் சொல்லிக் கொடுக்கும் வழிமுறையை இந்த தளத்தின் வடிவமைப்பிலிருந்து கற்றுக் கொள்ளலாம். |
Posted on 5:52 AM
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
| யூடியூப் இணையத்தளத்தின் புதிய சாதனை |
மதிப்பந்த வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்கள் தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும், தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது. இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் கோப்புகளாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கூகுள் அனைத்து பிரிவுகளிலும் நல்ல தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான். கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றைwww.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது. இங்கு சென்றால் இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம். |
Posted on 12:07 AM
| உங்கள் எண்ணம் போல் புகைப்படங்களை வடிவமைக்க |
இதன் மூலம் வண்ணமயமான புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் படங்களை ஒன்றிணைத்தல், பின்னணிகளை மாற்றியமைத்தல், மேலதிக ஒப்பனை செய்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். |
Posted on 12:05 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















