| மக்களவை கூடியதும், சவுதி அரேபியாவில் இருந்து வந்திருந்த எம்.பிக்கள் குழுவை சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். பின்னர் மறைந்த உறுப்பினர் தெக்லால் மகாட்டோவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உடனே, காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாஜக உறுப்பினர்கள் எழுந்து, ஊழல் புகார் காரணமாக மத்திய அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என கூறி அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களும் கோஷம் போட்டனர். இந்நிலையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால், அவையை மதியம் வரை மீரா குமார் ஒத்திவைத்தார். மாநிலங்களவையிலும் இதே நிலை காணப்பட்டதாக டெல்லி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. பின்னர் கேள்வி நேரத்தின்போது பாஜக, அதிமுக உறுப்பினர்கள் அமளியால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. |
நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டு அவையை சீரழித்த பாஜக, அதிமுக
Posted on 7:55 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)