புதன், 30 நவம்பர், 2011


சில நிமிடங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகள் உங்கள் மின்னஞ்சலுக்கு....... 
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது.அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களை தருகின்றது.
https://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subsribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகுளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்னர் சேமித்து விடவும்.
இனிமேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும். மேலும் அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும், ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றது இந்த தளம்.

செவ்வாய், 29 நவம்பர், 2011


வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 05:16.21 மு.ப GMT ]
இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம்.
புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம்,
ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும்.
அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும்.

பங்குவர்த்தகத்தில் களமிறங்கும் பேஸ்புக்
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 05:22.07 மு.ப GMT ]
சமூக இணையத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் பங்குவர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டொலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 2012ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்‌தபோதிலும் பங்குவர்த்தகத்தில் களமிறங்குவதற்கான இறுதிமுடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
800 மில்லியன் பயனாளர்களை கொண்ட பேஸ்புக் இணையத்தளத்தை தினமும் குறைந்தது 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம்பர சேவை - Word Ads

அனைவருக்கும் கூகுள் அட்சென்ஸ் பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் வசதியை இந்த கூகுள் அட்சென்ஸ் வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை கூகுள் அட்சென்ஸ் இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது கூகுள் அட்சென்ஸ் போல Wordpress தளம் WordAds எனும் புதிய விளம்பர வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை Federated Media(FM) தளத்துடன் இணைந்து WordPress தளம் வழங்குகிறது.  இனி பதிவர்கள் இந்த WordAds விளம்பரத்தையும் தங்கள் வலைப்பூக்களில் போட்டு அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.

இந்த விளம்பர வசதியில் கலந்து கொள்ள சில தகுதிகளை வேர்ட்பிரஸ் தளம் நிர்ணயித்துள்ளது.

தகுதிகள்:

  • WordPress தளத்தின் வலைப்பூவாக இருக்க வேண்டும்.
  • அதுவும் Custom Domain(.com) வாங்கிய வலைப்பூக்களாக இருக்க வேண்டும்.
  •  மற்றும் Site Traffic, Site Content, language ஆகியவைகளை பொறுத்தே உங்கள் வலைப்பூவை அனுமதிப்பதாக தெரிவித்து உள்ளனர். 
இந்த தகுதிகள் உங்களுக்கு இருந்தால் இந்த லிங்கில் கிளிக் செய்து சென்று அவர்களின் அறிவிப்பை பாருங்கள். அப்படியே கீழே இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்புங்கள். 

(Custom Domain இருந்தால் தான் படிவமே திறக்கிறது. ஆகையால் எனக்கு அந்த படிவம் வரவில்லை)

அந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் அவர்கள் உங்கள் பிளாக்கின் தகுதியை பொறுத்து அனுமதி வழங்குவார்கள். 

வேர்ட்பிரஸ் தளங்களுக்கு மட்டும் வழங்குவதால் மற்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தான். இது கூகிள் அட்சென்ஸ் உடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது.

இப்பொழுது தான் அறிமுகம் ஆகி உள்ளதால் மேலும் அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. விரைவில் அனைத்து தகவல்களுடன் பதிவு இடுகிறேன்.

பேஸ்புக் கணக்கை ஒரு முகவரியிலிருந்து மற்றொரு முகவரிக்கு மாற்றுவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 04:55.12 மு.ப GMT ]
பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஓபன் செய்து விடுகின்றனர்.
ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது.
ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
Save Changes என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.
உங்களின் மின்னஞ்சலை ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய முகவரி பேஸ்புக்கில் சேர்ந்து விடும்.
மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும்.
இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும்.
இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் முகவரியையும் பாதுகாக்கலாம்.
by lankasri

திங்கள், 28 நவம்பர், 2011


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் புத்தம் புது வசதிகள்
[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 07:11.30 மு.ப GMT ]
மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும் இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உள்பட இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் Spell Checker வசதி இல்லை. பல மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் இதனாலேயே இந்த உலாவியை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்களில் தந்துள்ளது.
Spell Checkerக்கருடன், Auto Correct வசதியும் தரப்படுகிறது. இதன் மூலம் வேர்ட் தொகுப்பில் நாம் எந்த சொற்களில் உள்ள பிழைகள் எல்லாம் தானாக திருத்தப்படுகின்றனவோ, அவை எல்லாம் இன்டர்நெட் எக்ஸ்புலோரர் பதிப்பு 10ல் தானாகவே திருத்தி அமைக்கப்படும்.
இந்த புதிய வசதிகளுடன் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்போது வெளியிடப்படும் என மைக்ரோசொப்ட் இன்னும் அறிவிக்கவில்லை. வெளியானவுடன் இந்த இரண்டு வசதிகளும் எத்தனை வாடிக்கையாளர்களை இழுக்கும் என நாம் காணலாம்.
by lankasri

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு
[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 04:56.10 மு.ப GMT ]
நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.
By. lankasri

சனி, 26 நவம்பர், 2011


Adobe Page Maker 7.0 மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 05:25.15 மு.ப GMT ]
Adobe Page Maker அடோப் நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் பலர் இதனை விடவில்லை. ஏனென்றால் இவ் மென்பொருளில் இருக்கும் இலகுத்தன்மையே இதற்கு காரணம்.
தற்பொழுது புதிய பதிப்பாக Adobe Indesign CS5 கூட வந்து விட்டது. இது பல மேலதிகமான தொழிற்பாடுகளுடன் கூடியது.
ஆனால் புதிய பதிப்பை பாவிப்பதற்கென கணணி கூடிய தகமைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவ் 7.0 பதிப்பிற்கு கீழ்வரும் தகமைகள் இருந்தாலே போதுமானதாகும்.
1. Intel ® Pentium ® processor.
2. Microsoft ® Windows NT ® 4.0 with Service Pack 6, Windows ® 2000 Professional with Service Pack 2, Windows XP.
3. Professional or Home Edition.
4. 32MB of available RAM (48MB or more recommended).
5. 175MB of available hard-disk space for installation (200MB or more recommended).
6. Video card with 800×600 resolution and 8-bit/256 colors (24-bit, high-resolution display recommended).
7. For Adobe ® PostScript ® printers: Adobe PostScript Level 2 or later.
கீழ் உள்ள Link ஐ பயன்படுத்தி இம்மென்பொருளை பதிவிறக்கி இலவசமாக பயன்படுத்துங்கள்.

ஒரே ஈடுபாடு உள்ள இன்னொருவரைத் தேடி தரும் மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 05:19.34 மு.ப GMT ]
ஒரே ஈடுபாடு மிக்க இன்னொருவரைத் தேடிக் கொள்ள விஞ்ஞானிகள் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
ஓர் உணவு விடுதிக்குச் செல்லும் போது உங்களது தொலைபேசி சிணுங்கி ஒத்த ஈடுபாட்டுடன் உள்ள ஒருவர் எங்கு இருப்பார் என்று தெரிவித்தால் எப்படியிருக்கும்.
இது கற்பனையல்ல. உங்களுக்குப் பொருத்தமானவர்கள் எங்கு கூடுவார்கள் என்பதைத் தெரிவிக்கும் தொலைபேசிகள் விரைவில் அனைவரின் கையிலும் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது இந்து சாஸ்திரவியலின் சமஸ்கிரதச் சொல்லான ஜோதிடம் என்பதிலிருந்து உருவான Jyotish என்று அழைக்கப்படுகின்றது. இந்த மென்பொருள் பத்து மீற்றர்களுக்குள் உள்ள wi-fi மற்றும் Bluetooth தொடர்புகளைத் தடந்தொடர்வதினால் ஒருவரின் நகர்வுகளை வரைபடமாக்குகின்றது.
இறுதியில் இது அவர்களது அடையாளத்தையும் சமூகப் பக்கங்களின் விபரங்களையும் கொண்டு ஒருவருக்குப் பொருத்தமான நபரை அல்லது தொழில் உதவியாளரைத் தெரிவுசெய்ய உதவும் என்கின்றனர்.
இந்த மென்பொருள் போயிங் விஞ்ஞானிகளால் அவர்களது பாரிய விமானத் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதில் 79 பேரில் அவர்களது விருப்பத்திற்கிணங்க இப்பரிசோதனையை Android தொலைபேசிகளில் செய்துபார்த்தனர். இது ஒருவரது Facebook நகர்வுகளைக் கண்டுபிடித்து ஏனையவர்களிடம் கூறியது.
ஆனால் இதில் தனிப்பட்ட இரகசியங்கள் எதற்கும் குந்தகம் வராது என்பதை பிரபல பல்கலைக்கழக கணணி விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளி, 25 நவம்பர், 2011


இணையத்தில் உளவு பார்த்தல்
[ சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 05:09.32 மு.ப GMT ]
நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில் நமக்குத் தெரியாமல் பல நிறுவனங்கள் தங்கள் வேவு பார்க்கும் கோப்புகளை நம் கணணியில் பதிக்கின்றன.
நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.
சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன்படுத்துகின்றன.
நம் கணணியில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.
1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கணணிகளில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ்களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை.
ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் வகையில்(Web tracking) செயல்படுபவை.
2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன.
அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கணணியில் பயன்படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும் நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை.
பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கணணிக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.
3. இணையக் கண்காணிப்பு புரோகிராம்கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை, பாதி உண்மை அற்றது.
நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப்படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன.
ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும் இதனை நிரூபிப்பது கடினம்.
5. கைபேசியில் இருப்பது போல எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை.
ஆனால் இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதியுடன் நீக்கும் புரோகிராம்களைக் கணணயில் நிறுவச் செய்து அவ்வப் போது இயக்கினால் நாம் இதிலிருந்து மீளலாம்.
6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால் இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால் ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை.
விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இணையம் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.

நாம் பார்வையிடும் இணையத்தளங்கள் பாதுகாப்பானவையா? என அறிந்து கொள்ள.. 
இன்றைய இணையதளங்களில் எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை. பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம்.
சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன
(1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.�
(2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி.�
(3)பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு.�
(4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.
அறிக்கையில் மொத்த தளம் குறித்த பாதுகாப்பு தன்மை கூறப்படுகிறது. வர்த்தக ரீதியில் இல்லாத தளம் என்றால் பொதுவான பாதுகாப்பு நிலை தரப்படுகிறது. அடுத்ததாக, வர்த்தகதளம் எனில் அதனுடன் வர்த்தகம் மேற் கொள்கையில் நமக்கான பாதுகாப்பு எப்படி என்று காட்டப்படுகிறது. அடுத்ததாக பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் உள்ளன.
இறுதியாக என்ன என்ன பயமுறுத்தல்களை இந்த தளம் கொண்டுள்ளது என்று அதிலிருந்து அனுப்பப்படும் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.
வலது பக்கத்தில் நீங்கள் சோதனை செய்திடும் தளம் சமுதாய கண்ணோட்டத்தில் எப்படிப் பட்டது என்று காட்டப்பட்டு அந்த தளம் குறித்த கருத்துக்களும் வைக்கப் படுகின்றன. இதற்கு முன்னதாக இந்த தளத்தினை நமக்குக் காட்டும் பொதுவான குறியீடுகள் (tags) தரப்படுகின்றன.
இறுதியாகச் சொல்லப்பட்ட சமுதாயக் கண்ணோட்ட அறிக்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துக்காட்டாக யூடியூப் தளம் குறித்து கேட்டபோது மிக நல்ல தரம் கொண்டது எனக் காட்டப்பட்டது.
சமுதாயக் கண்ணோட்ட அறிக்கையில் யூடியூப் தளத்தில் காட்டப்படும் வீடியோ குறித்த தகவல்களில் உள்ள லிங்க்குகள் மோசமான தளத்திற்கு உங்களை எடுத்துச் செல்லலாம் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.
இப்போதெல்லாம் நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று நாம் சிறிது கூட எண்ணிப் பார்க்க இயலாது. எனவே நார்டன் தரும் இந்த தளம் நமக்கு நல்ல பாதுகாப்பினை அளிக்கிறது.
30 விநாடிகளில் முழு பாதுகாப்பு குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அறியாத தளங்களுக்குச் செல்லும் முன் இந்த தளம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லதல்லவா! 30 விநாடிகள் செலவழித்தால் பின்னர் நாம் அறியாமல் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியதில்லையே.

Youtube- ஐ வீழ்த்த யாகூவின் புதிய வீடியோ தளம்- Yahoo Video


யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங்கும் ஒரு சேவையாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப் படுகிறதாம். இந்தியாவில் ஒருவர் சராசரியாக 58வீடியோக்களை ஒரு மாதத்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யாகூ நிறுவனம் யூடியுப் தளத்திற்கு போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.


இந்த தளத்திலும் யூடியுப் தளத்தில் உள்ளதை போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். யாஹூ தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட ஒரிஜினல் வீடியோக்களை மட்டுமே இந்த தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. யாகூ நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டுவந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

கீழே வீடியோக்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் பட்டியல் 

Category
Partners
NewsNDTV, Headlines Today , Aajtak, Newzstreet, ANI, Star News, Star Majha, Star Ananda
MoviesDigit 9, Shemaroo, Ultra, Reliance Pictures,Sri Ganesh Video, Star Entertainment, PVR Pictures, Shree International
TV ShowsStar Plus, Star One, Channel V, Star PravahStar Jalsa, Star Vijay, Star World, 9XM
Regional and English MoviesDigit 9, Shemaroo, Ultra, Kavithalaya,Sri Ganesh Video
FinanceNDTV (Profit)
BollywoodNDTV, Newzstreet, Lehren, Glamsham, Saanskruti, Movie Talkies, Nine Winds, Digit 9

அவ்வளவும் ஒரிஜினல் வீடியோக்கள் என்பதால் தரத்தை பற்றி கவலை இல்லை. ஆனால் வாசகர்கள் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை.  ஆதலால் தற்பொழுது யூடியுப் தளத்துடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது. பிற்காலத்தில் மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்த தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை.

இந்த தளத்திற்கு செல்ல - http://in.video.yahoo.com/

வியாழன், 24 நவம்பர், 2011


பாரக் ஒபாமா(Barack Obama) தற்பொழுது கூகுள் பிளசில்

சமீப காலமாக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சமூக இணையதளங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் தளத்தில் உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் அனைவரும் கணக்கு வைத்து அவர்களின் கருத்துக்களை எளிதில் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கூகுளின் புதிய சமூக இணையதளமான கூகுள் பிளசில் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இணைந்துள்ளார்.



கூகுள் பிளசில் பாரக் ஒபாமா தற்பொழுது ஒரு பக்கத்தை உருவாக்கி தகவல் பகிர்ந்துள்ளார். புதன் கிழமை அவர் கூகுள் பிளசில் இணைந்துள்ளார். அவரை உங்கள் வட்டத்திற்குள் சேர்த்து கொண்டால் அவர் பகிரும் தகவல் உடனே உங்களை வந்து சேரும். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் ஒபாமா கூகுள் பிளசில் பகிர்ந்த முதல் தகவல் இதுவரை 180 நபர்களால் மட்டுமே Share செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து விடுவார் என்ற நம்பிக்கையிலும், ஜார்ஜ் புஷ் மீது இருந்த வெறுப்பின் காரணத்தினாலும் ஒபாமா இவரை நம்பி அதிபர் அரியணையில் அமர வைத்த மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் பல புதிய பிரச்சினைகளை கொண்டு வந்துவிட்டார் என இவர் மீது ஏற்ப்பட்டிருக்கும் வெறுப்பின் காரணமாகவே யாரும் அதிகமாக Share செய்யவில்லை என்ற பேச்சு ஒரு புறம் கிளம்பி உள்ளது.

யாருப்பா அது மைன்ட் வாய்ஸ்ல நம்ம தமிழ்நாட்டு மக்கள் போலன்னு சொல்றது. முதல்ல நாம திருந்துவோம் நம்மால் முடிந்தவரை பிறரை திருத்துவோம் இலவசங்களை எதிர்ப்போம் அப்பொழுது தான் இந்த நிலை மாறும்.



ஈமெயில்கள் படித்தால் பணம் - இணையத்தில் பணம் சம்பாதிக்க[Earn money from Internet]


பணத்துக்கான அருமையை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒரு அடையாள பொருளாக உருவாக்கிய பணம் நம்மை ஆட்டுவிக்கும் நிலைமை. ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் அவசியமாகிறது. காசு கொடுத்தால் தான் கடவுளை கூட பார்க்க முடியும் என்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. முயற்சி செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனை விட முயற்சி செய்து தோல்வி அடைபவன் ஆயிரம் மடங்கு மேல் கண்டிப்பாக அவனுக்கு வெற்றி நிச்சயம். பல பேருக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கான என் பதில் கண்டிப்பாக பல வழிகள் இருக்கிறது இணையத்தில் சம்பாதிக்க. அதில் ஒரு வழியான ஈமெயில்கள் படித்தால் பணம் தரும் ஒரு தளத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன். 
இந்த சேவையை பல தளங்கள் நமக்கு வழங்கினாலும் நாம் பார்க்க போகும் Paisa Live தளம் மிகப்பிரபலமான தளம். பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த தளத்தில் முதலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். 

தளத்தின் சிறப்பம்சங்கள்: 
  • நீங்கள் இந்த தளத்தில் சேர்ந்த உடனே உங்களுக்கு போனஸ் தொகையாக Rs 99 உங்கள் அக்கௌண்டில் சேர்த்து விடுவார்கள்.
  • யாரேனும் ஒரு நண்பரை சேர்த்து விட்டால் மேலும் Rs.50/- உங்கள் கணக்கில் சேர்ந்து விடும். 
  • Refferel மூலம் சேர்க்க படும் ஒவ்வொரு நண்பருக்கும் Rs.2/- தொகையை உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
  • எந்த வித ஏமாற்று வேலையும் இல்லாமல் உங்கள் பணத்தை அனுப்பி விடுவார்கள்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த தளத்தில் உறுப்பினர் ஆகியவுடன் இவர்கள் உங்களுக்கு 10 to 15 ஈமெயில்களை அனுப்புவார்கள். அதை ஒவ்வொன்றாக ஓபன் செய்தால் அதில் ஒரு லிங்க் காணப்படும் அதை க்ளிக் செய்யவும். 
  • இந்த தளத்தில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு தனி ஈமெயிலை உருவாக்கி அதன் மூலம் சேர்ந்து விடவும். Spam செய்திகள் வர வாய்ப்புள்ளது. 
  • சில ஈம்யில்கள் குறிப்பிட்ட கால அளவு தான் கொடுத்து இருப்பார்கள் அதற்குள் அந்த ஈமெயிலை படிக்க வில்லை என்றால் அந்த ஈமெயில்கள் தானாக அழிந்து விடும். 
  • ஒரு சில ஈமெயில்கள் படித்தால் 2 லிருந்து 3 ரூபாய் வரை தருவார்கள் அது போன்ற ஈமெயில்களை தவற விட வேண்டாம். 
  • தினமும் ஒரு 15 நிமிடம் இதற்காகவே ஒதுக்கி விடுங்கள். 

பணம் பெறும் வழிமுறை:
  • உங்களுடைய கணக்கில் குறைந்தது Rs.500/- வந்தால் தான் உங்களால் இந்த தளத்தில் இருந்து தொகையை பெற முடியும்.
  • Rs.500/- உங்கள் கணக்கில் சேர்ந்தவுடன் நீங்கள் பணம் பெறுதலுக்கான கோரிக்கையை அவர்களுக்கு அனுப்பவேண்டும். 
  • கோரிக்கை அனுப்பிய பிறகு அவர்கள் உங்கள் கணக்கை பரிசோதித்து ஏதாவது வரம்புகள் மீறி இருந்தால் அதற்க்கான தொகையை குறைத்து கொண்டு பதிலை ஏழு நாட்களுக்குள் தெரிவிப்பார்கள்.
  • கடைசியில் உங்கள் அவர்கள் குறைத்தது போக Rs.450/- மேல் உங்கள் கணக்கில் இருந்தால் உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு காசோலையை அனுப்பி விடுவார்கள். ஆதாலால் கோரிக்கை அனுப்புவதற்கு முன் கோரிக்கை உங்களுடைய தொடர்பு முகவரியை பரிசோதித்து கொள்ளுங்கள்).
இணையத்தில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்கள் தினமும் 15 நிமிடம் செலவழித்து பணம் சம்பாதித்து கொள்ளுங்கள்.


மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் கருத்துரையில் கேளுங்கள். 


124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com