சனி, 31 டிசம்பர், 2011
| பேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு |
இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது. Chat messanger மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணணியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம் மற்றும் உடனுக்குடன் notifications காணலாம். இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணணிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது. இதற்கு முதலில் இந்த Facebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருள் தரவிறக்கம் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும், அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும். |
Posted on 8:23 PM
வியாழன், 29 டிசம்பர், 2011
| Auto Shutdown: கணணியை தானாகவே ஷெட்டவுண் செய்வதற்கு |
அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கணணி தானாகவே நின்றுவிட உதவும் வகையில் உங்களுக்கு ஓர்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் Shut Down, Log Off, Stand by, Hibernate என பல ரேடியோ பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் தேவையானதை தெரிவு செய்யவும், அடுத்தது எந்த நேரத்தில் கணணி நின்று விட வேண்டும் என நினைக்கின்றோமோ அந்த நேரத்தை தெரிவு செய்யவும். குறிப்பிட்ட நாளில் குறிபிட்ட நேரத்தில் நின்று விட வேண்டுமா அதனையும் நாம் தெரிவு செய்யலாம். இவை அனைத்தையும் தெரிவு செய்து பின்னர் இதில் உள்ள Start task கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி நீங்கள் மற்ற பணிகளை பார்க்கலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் உங்கள் கணணி தானாகவே நின்றுவிடும். |
Posted on 11:15 PM
| இணையம் மூலம் நட்பு வளர்ப்பதற்கு |
இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது. நமக்கு தேவையான அளவுக்கு தூரிகையின் முனையை பெரிதாக்கி கொள்ளலாம். இதனுடனே அழிக்கும் வசதியும் இருக்கிறது. மேலே உள்ள கட்டத்தல் வண்ணங்கள் இருக்கின்றன. எந்த வண்ணம் தேவையோ அதனை தெரிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது கட்டம் வரைந்த சித்திரத்தை சேமித்து கொள்வது உட்பட வசதியை தருகிறது. சித்திரத்தை பேஸ்புக் அல்லது டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. அத்துடன் இந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களையும் வரைய சொல்லலாம். கணணி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும், அவர்களோடு சேர்ந்து வரையும் வசதியுமே இந்த தளத்தின் சிறப்பம்சம். |
Posted on 11:12 PM
| கைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் |
ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கைபேசிகளில் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும், இதன் மூலம் எமது கைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன், குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார். அதாவது நமது கைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும். இப்பாதுகாப்புக் குறைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது. எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை கைபேசி உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது. |
Posted on 11:09 PM
| இலங்கையின் சனத்தொகையோ சுமார் இரண்டு கோடி! பாவனையிலுள்ள கைத்தொலைபேசிகளோ சுமார் இரண்டு கோடியே பத்து இலட்சம்! உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கு. |
தற்போது புற்றுநோய் அதிகரிப்பிற்கு அதிகரித்த தொலைபேசிப் பாவனையே காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலமே இத்தரவினை வெளியிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. |
இலங்கையில் உள்ள சனத்தொகை சுமார் இரண்டு கோடி. ஆனாலும் இரண்டு கோடியே பத்து இலட்சத்திற்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஒருவரிடம் இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் கையடக்கத் தொலைபேசியின் மூலம் தினமும் நீண்ட நேரம் கதைப்பதனாலேயே புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார். இதனையும் விட நாட்டில் இடம்பெற்று வருகின்ற ஊழல் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் பெரும்பாலானவற்றிற்கும் மற்றும்வாகன விபத்துக்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுளள்ளார். |
Posted on 8:13 PM
| . நீங்கள் காதலில் வெற்றி பெற சில விடயங்கள். |
மனிதகுலம் தோன்றிய முதல் காதல் இருக்கிறது . காதல் மனிதனுக்கு மட்டுமல்ல , எல்லா உயிரினத்துக்குள்ளேயும் காதல் இருக்கிறது. மென்மையான காமம் தான் காதல் . காதலில் ஒரு விதமான காமம் இழையோடிக் கொண்டிருக்கிறது. காமம் இல்லாமல் காதல் இல்லை . காமம் இல்லாத காதல் என்பது அன்பு. காதல் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை எதிர்பார்ப்பது . அன்பு எதிர் பார்ப்பற்றது. அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் செலுத்தலாம் . காதலுக்கு வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. அன்புக்கு வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. ஆண் பெண்ணிடமோ , பெண் ஆணிடமோ அன்பு செலுத்தினால் அது காதலாக மாறும் . காதல் அன்பாக மாறாது. காதல் என்பது உணர்வுகளின் உச்சக்கட்டம். |
கால் முறிந்தால் கூட சரியாக்கலாம் ஆனால் காதல் முறிந்தால் ஒன்றும் செய்ய இயலாது. அன்புக்கு காரணம் சொல்லலாம் , காதலுக்கு காரணம் சொல்ல முடியாது. அன்பும் காதலும் வேறு வேறு , பிரித்தறிய தெரிய வேண்டும். அன்புக்கு வரையறையுன்டு . காதல் அப்படியல்ல,அன்பை விட ஒருபடி மேலே,உயிருடன் உயிராய் உடலுடன் உடலாய், அப்படிபட்ட மேலான காதலை வெற்றி பெறச்செய்வது எப்படி? காதலில் வெற்றி பெறுவது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான், இருந்தாலும் காதல் செய்துவிட்டு அதிலிருந்து வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் . ஒரு சில பேரே காதலில் வெற்றி பெறுகிறார்கள். கடைசிவரை சந்தோசமாக வாழ்கிறார்கள் . காதல் செய்வதற்கு முன் நாம் வாழும் சமுதாய அமைப்பை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் . உணர்ச்சி வசப்படக்கூடாது. காதலை வெளிப்படுத்தாமல் காதலிக்கக்கூடாது. காதலை வெளிப்படுத்துவதற்கு முன் காதலரைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். காதலரின் நண்பர் மூலமாக அவரைப்பற்றி தெரிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் . வெளித்தொற்றம் கண்டு எடை போடக்கூடாது. அவரது பெற்றோர் மற்றும் சொந்த ஊர் முதலியன தெரிந்து கொள்வது நல்லது. பெற்றோர்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும் . பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர் பெற்றோரை எதிர்த்து துணிச்சலோடு கல்யாணம் செய்து கொள்வாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை எதிர்த்து வர முடியாதவராய் இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் . காதலர் கடைசி நேரத்தில் காலை வாரிவிடடால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் . கண்டபடி சுற்றுவதை தவிர்க்க வேண்டும் . வரம்பு மீறி நடப்பதை தவிர்க்க வேண்டும் . அளவோடு சந்தித்து அளவோடு பேச வேண்டும் . அன்றாடம் குடும்பத்தில் நடந்த விசயங்களைப் பேசுவதை தவிர்க்க வேண்டும் . அறிவுப்பூர்வமன விசயங்களைப் பேச வேண்டும் . பொதுவான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் . காதலர் கல்யாணம் பற்றி பேசும் போது என்ன நினைக்கிறார். அவரில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்று கவனிக்க வேண்டும் . காதலை வெளியிட்டவுடன் , கல்யாணத்துக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . அதிக காலம் கடத்தக் கூடாது. காலம் கடத்தும் காதலரை உற்று நோக்க வேண்டும் . உள் மனதை ஆராய வேண்டும். காலம் கடத்துவது நியாயமானது தானா என்று ஆராய வேண்டும் . காதலர் ஏமாற்றிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும் . பாதிக்கிணறு தாண்டும் போது அம்மா அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்று சொல்வார்கள் .அப்படிப்பட்ட காதலர் அம்மா அப்பாவை எதிர்த்து துணிச்சலாக கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார். பெற்றோரை காரணம் காட்டிக் கொண்டே இருப்பார். இப்படிப்பட்டவரின் காதல் தோல்வியில் போய் முடியும். அதனால்தான் காதலை வெளிப்படுத்தியவுடன் காலம் கடத்தக் கூடாது. பெற்றோருக்கு விருப்பமில்லை என்று காலம் கடந்து தெரியவரும் போது வருத்தமாக இருக்கும் . என்ன செய்வது என்று தெரியாது , பிரச்னைகள் தலையெடுக்கும் , உடனே திருமணப் பேச்சை தொடங்க வேண்டும் . காதலிப்பது மூண்றாம் நபருக்கு தெரியக்கூடாது என்று மறைக்கக்கூடாது. அவ்வாறு மறைப்பது தமக்கு தாமே குழிபறித்துக் கொள்வது ஆகும் . காதலை வெளியிட்டவுடன் , இருவர் மனமும் ஒத்துப் போனவுடன் , தாங்கள் காதலர்கள் என்று இவ்வுலகம் அறிய வேண்டும் . அப்போதுதான் , உடனடி எதிர்ப்புகள் சமாளிக்கப்பட்டு ,சமாதானப்படுத்தப்பட்டு, காதல் கல்யாணத்தில் போய் முடியும். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணத்தை தள்ளிப்போடும் காதலரைவிட்டு உடனடியாக தள்ளிப் போய்விடுவது நல்லது .இல்லையென்றால் இறுதியில் ஒன்றும் செய்யமுடியாமல் காதலில் தோல்வி கண்டு துவண்டு விழ நேரிடும். அல்லது காதலரை கட்டாயப் படுத்தி கல்யானத்துக்கு உடனடியாக சம்மதிக்க வைத்து கல்யாணத்தை முடித்து விட வேண்டும் . இது இரு பாலருக்கும் பொதுவானது. சிலா பெற்றேர்ருக்கு சம்மதமில்லை வரதட்சனை எதிர்பார்க்கிறார்கள் , வரதட்சனை கொடுத்தால் சம்மதிப்பார்களாம் என்று சொல்லும் காதலனைவிட்டு உடனடியாக விலகிவிடுவது நல்லது. வரதட்சனை கொடுத்தபின்பும் பெற்றோரின் கொடுமை தொடர்ந்தால் என்ன செய்வது . இவையெல்லாம் முன்கூட்டியே அறிய வேண்டும். வாய் சொல் வீரனா செயல் வீரனா என்று அறிந்து காதல் செய்ய வேண்டும் . காதலர்கள் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளு முன் பெற்றோர்களின் சம்மதத்தை கேட்டுக்கொள்வது நல்லது , குடும்பச்சூழ்நிலை , பொருளாதாரம் , பாரம்பரியம் , முதலியவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் .இதன் பிறகு காதலித்தால் இனிமை கூடும். காதலில் என்றும் உடல் நாட்டம் இருக்க கூடாது. காதல் மனம் சார்ந்ததாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும் . உயர்வானதாக இருக்க வேண்டும் . உத்தமமாக இருக்க வேண்டும் . வாழப்போகும் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்க வேண்டும் காதல். காதல் இவ்வாறாக இருந்தால் வெற்றி பெறும் . இன்றைய சமுதாயத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் அதிகமாக காதல் செய்கிறார்கள் . அவர்களின் காதலில்தான் ஆயிரம் பிரச்னைகள் . எத்தனையோ விசயங்களை அலசி ஆராயும் இவர்கள் சொந்த விசயங்களில் சோடை போய் விடுகிறார்கள். கட்டுப்பாடில்லாமல் வரம்பு மீறி நடந்துவிட்டு , பின் காதலென்று சொல்லி காலம் கடத்துபவர் ஏராளமானோர் . அவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும் . ஆரம்பத்தில் வரதட்சனை ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி , காதலிக்க தொடங்கி காலங்கடத்தி கல்யாணம் என்ற நெருக்கடி வரும் போது அம்மா அப்பா சம்மதம் இல்லை , அவர்களை எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்று காலம் கடத்தி , சிறிது காலம் கழித்து அம்மா அப்பா ரொம்ப கறாறா இருக்குறாங்க , நான் கல்யாணம் செய்தா உயிரை விட்டுறாவாங்களாம் என்று பயமுறுத்தி , இன்னும் சிறிது காலம் கடத்தி , அதிகமான வரதட்சைனை கொடுத்தா வந்து பேசுவாங்களாம் என்று சொல்லி ஆழம் பாத்து , ரெண்டு பேரும் ரிஐpஸ்டர் மேரேஜ் செய்யலாம்னு சொன்னா உங்க குடும்பம் மரியாதையான குடும்பம் , அதுக்கு கேடு வந்துரக்கூடாதுன்னு போலி சமாதானம் சொல்லி பொழுதைக் கழிக்கும் காதலரை நம்பி பின்னால் திரிவது பேதைமையாகும். காதலிக்கும் முன் நன்றாக யோசித்து , பொறுமையாக , செயல் பட வேண்டும். காதல் என்பது உணர்வின் அடிப்படையில் தோன்றினாலும் , உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுப்பூர்வமாக செயல் பட்டால் காதல் என்றும் ஜெயிக்கும். |
Posted on 7:39 AM
| ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து அவரது இருப்பு இடத்தை கண்டுபிடிக்கல |
ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில் எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு. ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். |
நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில் அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும் Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக கண்டுபிடிக்கலாம். இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில் சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைசியாக அவர் ஆக்சஸ் செய்த IP முகவரியை எளிதாக எடுத்துக்கொடுக்கும் உடனடியாக இவர்கள் அந்த முகவரியை இங்கு கொடுத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். உதாரணமாக நாம் நம் நண்பர் ஒருவர் அனுப்பிய IP முகவரியை கொடுத்துப் பார்த்தோம் சரியாக இருக்கும் இடத்தை காட்டியது. கண்டிப்பாக இந்ததளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். தகவல்:செழியன். டென்மார்க். |
Posted on 7:26 AM
திங்கள், 26 டிசம்பர், 2011
ஆன்ராய்ட் மொபைல்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய இலவச Avast Anti Virus மென்பொருள்
அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணினிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து கணினியை பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். கணினி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது மொபைல் உலகிலும் கால் வைத்துள்ளது. முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் மொபைல்களுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம். இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.
- Antivirus Production- Real time Production, Custom Updates
- Web Shield
- Call / SMS filter
- Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
- Firewall
- Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.
கீழே மற்ற மென்பொருட்களுக்கும் அவாஸ்ட் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது. இந்த மென்பொருள் செயல் படும் விதத்தை விளக்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
இந்த மென்பொருளை Avast for android இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். கணினியில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யும் பொழுது உங்கள் கணினியோடு உங்கள் ஆன்ராய்ட் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Posted on 8:44 PM
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
| ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம் |
பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள். நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும். கூகுள் சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம். இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர் பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் Enter கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும். இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும். ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும் அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது. |
Posted on 12:33 AM
வியாழன், 22 டிசம்பர், 2011
| கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் பெறுவதற்கு! |
கணணியை பயன்படுத்தும் அனைவருக்கும் கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் அனைத்தும் தெரிந்திருக்காது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணணியில் என்னென்ன வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணணியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணணியில் என்னென்ன இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். |
இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணணியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணணியில் என்னென்ன வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணணியின் விவரங்களை காண முடியும். |
Posted on 10:09 PM
| பிரத்தயேக மென்பொருட்களை பாவிக்காது கோப்புறையினை பூட்டுவது எப்படி? பின்வரும் வழிமுறையை பின்பற்றவும். |
ஒரு கோப்புறையினை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பேடை மாத்திரம் வைத்து ஒரு கோப்புறையினை எவ்வாறு பூட்டுவது என்று பார்ப்போம். |
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும். முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும் ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் . Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது . |
Posted on 10:05 PM
| மிக அழகான தோலை பெறுவதற்கு சில வழிகள் |
மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது அரிது . தங்களது தோலை பாதுகாக்க என்னென்னவோ முயற்சி செய்கின்றனர். தங்களது தோலில் சிறிய சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோபோச்சே என கவலை கொள்கின்றனர் . அவர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி . |
"தோல் சுருக்கத்தைகுறைக்க" அல்லது அப்படியே காணாமல் போகச்செய்ய, அதிகமாக தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல்சுருக்கம் மறைந்து விடுவதோடு , தோலுக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கின்றது. எனவே இளமையாக தோன்றலாம். இதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இதில் கலந்துகொண்ட பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச்செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது-இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் மினரல் வாட்டராகும். தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர் அதாவது, செயற்கையான சருமகிரீம்களில் பயன்படுத்தபடும் சாலிசிலிக்ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம்பெறுவதால்தான் தோல்சுருக்கம் காணமல் போகிறது. இதில் கலந்துகொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பிறகும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு பிறகு எடுக்கபட்ட புகைப்படங்களில் 'பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்'. சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு 19சதவிகிதமும், வில்லோதண்ணீர் குடித்தவர்களுக்கு 24சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம். எது எப்படியோ ஆக மொத்தத்தில் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும். |
Posted on 6:24 AM
| மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை துண்டு துண்டாக பிரிப்பதற்கான மென்பொருள் ... |
மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.இவ்வாறுள்ள மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம். மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது. |
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கலாம். தரவிறக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். Destination Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split என்பதை சொடுக்கினால் போதும். உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம். |
Posted on 6:10 AM
2011ல் யூடியூபில் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட Top 10 வீடியோக்கள் - Youtube Rewind 2011
உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட Top10 வீடியோக்கள்:- Rebecca Black - Friday
- Ultimate Dog Tease
- Jack Sparrow (ft. Michael Bolton)
- Talking Twin Babies
- Nyan Cat [original]
- Look At Me Now
- The Creep
- Maria Aragon - Born This Way
- The Force
- Cat Mom Hugs Baby Kitten
இந்தியாவில் அதிகமானோர் பார்த்த Top10 வீடியோக்கள்
- Don 2 - Official Teaser
- RA.One - Teaser Trailer
- Agneepath Trailer - Official
- Singham - Trailer Full HD
- Star Light Star Bright - Mother Goose Club Nursery Rhymes
- Mission Impossible 4 - Ghost Protocol - Official Trailer
- The 7 Trumpets of Revelation | The Day Trumpet 1 Hits Earth
- iPhone 5 Concept Features
- Bodyguard - Official Trailer HD
- The Silent Indian National Anthem
இந்தியர்கள் அதிகமாக பார்த்த பாடல் வீடியோக்கள்:
- Jennifer Lopez - On The Floor
- Dhinka Chika - Ready
- Teri meri prem kahani - Bodyguard
- Character Dheela - Ready Ft. Salman Khan
- Dhunki - Song - Mere Brother Ki Dulhan
- Delhi Belly - Bhaag DK Bose - Extended Version (4mins) HD
- Why This Kolaveri Di Full Song Promo Video in HD
- Pitbull - Rain Over Me
- Pitbull - Give Me Everything
- Mit Jaaye Gham- 'Dum Maaro Dum'
இந்த Top10 பட்டியலை பற்றி யூடியுப் நிறுவனம் வெளியிட்ட வீடியோவை கீழே பாருங்கள்.
Posted on 5:38 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








