செவ்வாய், 31 ஜனவரி, 2012


அதிக வசதிகள் கொண்ட VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1ஐ தரவிறக்கம் செய்ய

கணணியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, ஓடியோக்களை இயக்குவதற்கு அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC மீடியா பிளேயர் ஆகும்.
விண்டோஸ் மீடியா பிளேயரில் நிறைய வீடியோ போர்மட்களை பார்க்க முடியாது. அவ்வாறு பார்க்க வேண்டுமெனில் கொடெக் மேலதிகமாக நிறுவ வேண்டும். ஆனால் VLC மீடியா பிளேயரில் அதிகளவு வீடியோ, ஓடியோ போர்மட்களை இயக்க முடியும்.
இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி அதன் பயன்களை பெறலாம்.
இதில் இயக்கக்கூடிய வீடியோ போர்மட்டுகள்
MPEG-1/2,
DIVX (1/2/3), 
MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
H.261,
H.263 / H.263i,
H.264 / MPEG-4 AVC,
Cinepak,
Theora
Dirac / VC-2
MJPEG (A/B)
WMV 1/2
WMV 3 / WMV-9 / VC-1
Sorenson 1/3 (Quicktime)
DV (Digital Video)
On2 VP3/VP5/VP6
Indeo Video v3 (IV32)
Indeo Video 4/5 (IV41, IV51)
Real Video 1/2, Real Video 3/4
இதில் இயக்கக்கூடிய ஓடியோ போர்மட்டுகள்
MPEG Layer 1/2
MP3 - MPEG Layer 3
AAC - MPEG-4 part3
Vorbis
AC3 - A/52 (Dolby Digital)
E-AC-3 (Dolby Digital Plus)
MLP / TrueHD">3
DTS
WMA 1/2
WMA 3 1
FLAC
ALAC
Speex
Musepack / MPC
ATRAC 3
Wavpack
Mod (.s3m, .it, .mod)
TrueAudio (TTA)
APE (Monkey Audio)
Real Audio 2
Alaw/µlaw
AMR (3GPP)
MIDI 3
LPCM
ADPCM
QCELP
DV Audio
QDM2/QDMC (QuickTime)
MACE

கணணியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்குவதற்கு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்கள் என்றால் பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
இதன் பெயர் WEB CARTOON MAKER ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்தி கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.
மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம்.
அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோக்களுக்கு ஒலி வடிவம் கொடுக்க முடியும். ஓன்லைனிலும் வடிவமைக்க முடியும். இது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
by.lankasri

திங்கள், 30 ஜனவரி, 2012


இலவசமாக SKYPE ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க வேண்டுமா?

ஒரு மணி நேர INTERNATIONAL CALL IN SKYPE இலவசமாக பெருவதற்க்கான வழிமுறைகள் இதோ
1.இந்த முகவரியில் சென்று (அத்தளத்திற்க்கு செல்ல இங்கே அழுத்தவும்)
HOTSPOT SHIELD மென்பொருளை தறவிரக்கம் செய்து கணினியில் பதிந்து கொண்டு .பின் TASK BAR ல் HOTSPOT SHIELD ICON ஐ RIGHT CLICK


செய்து CONNECT/ON செய்தபின். உங்களுடைய DEFAULT BROWSER ல் CONNECTION STATUS  LOAD அகும்

CONNECT ஆனபின் மற்றொரு பக்கதிற்க்கு REDIRECT ஆகும் .அங்கு START ஐ அழுத்தி

ஸ்டார்ட் ஆனபிறகு அப்பக்கத்தை மூடிவிட்டு .உங்கள் இலவச FREE SKYPE  VOUCHER ஐ பெற  (இந்த முகவரிக்கு செல்லவும் CLICK HERE)

GET FREE VOUCHER NOW  க்லிக் செய்தவுடன் உங்களுக்கான இலவச RECARGE VOUCHER CODE வரும்

அதை COPY செய்து கொண்டு.பின் SKYPE தளத்திற்க்கு சென்று LOGIN செய்தபின்னர்  இந்த முகவரிக்கு செல்லவும் (CLICK HERE)
பின் அந்த இலவச வவுச்சர் கோட்டை PASTE செய்து REDEEM அழுத்தவும். அவ்வளவுதான் இப்பொழுது உங்கள் SKYPE அக்கவுன்ட் BALANCE ஐ பாருங்கள்.

முகம் தெரியாதவர்​களுடனான ஓன்லைன் வீடியோ சட்டிங்கிற்​கு சிறந்த தளங்கள்

நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் வீடியோ சட்டிங் செய்ய விரும்புவீர்கள். அதற்கான  வசதியை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றைப்பற்றி இங்கு பார்ப்போம்.
1. Omegle: இத்தளமானது 2009ம் ஆண்டு 18 வயதுடைய இளைஞனால் உருவாக்கப்பட்டது. இங்கு சட் செய்யும் போது எந்தவிதமான பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தளத்திற்கு விஜயம் செய்ததும் ஒருவருடன் சட் செய்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்படும்.
2. ChatRoulette: இது ரஷ்யாவை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்ட தளமாகும். இத்தளத்தை பயன்படுத்துவதற்கு வயது வரையறைகள் இல்லை. ஆனால் சட் செய்யும் முன்பு தங்களை பதிவு செய்தல் அவசியமாகும்.
3. Rounds: ஏனைய தளங்களை விட இங்கு அதிகளவு வசதிகள் காணப்படுகின்றன. அதாவது சட் செய்வதை தவிர  ஓன்லைன் கேம், Mp3 பாடல்களை கேட்டல், youtube வீடியோக்களை பார்க்க கூடியவாறு இருத்தல் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. இத்தளத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே சட் செய்ய முடியும்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012


நீங்களும் ஓவியக் கலைஞராக மாற உதவும் பயனுள்ள மென்பொருள்

கணணியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா (Smooth Draw) ஆகும்.
இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது.
எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.

புதன், 25 ஜனவரி, 2012


பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க

பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பேஸ்புக்கில் படங்களை பகிருவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விசேடமான முறையாக Slideshow காணப்படுகின்றது.
இவ்வாறு சிறந்த முறையில் Slideshowக்களை உருவாக்குவதற்கு Magix Slideshow Maker என்ற மென்பொருளை பயன்படுத்த முடியும். இதில் நூற்றுக்கணக்கான effects, transitions, music, sound காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இம்மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Slideshow வை வீடியோவாக மாற்றி பேஸ்புக் தளத்தில் பகிர முடியும். தவிர YouTube, Flickr போன்ற தளங்களிலும் நேரடியாக பதிவேற்ற முடியும்.

உங்கள் கணணி நன்றாக இயங்க சில எளிய ஆலோசனைகள்!

கணணி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

1. உங்களுடைய இயங்குதளம் அப் டேட்டட் ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் இயங்குதளத்திற்கான அண்மைக் காலத்திய அப்டேட்டட் கோப்புகள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும்.

2. நீங்கள் உருவாக்கிய தகவல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான ஆண்டி வைரஸ் இருக்க வேண்டும். அதுவும் அவ்வப்போது அப்டேட்டட் ஆக இருக்க வேண்டும்.

3. தேவையில்லாமல் கணணி பூட் ஆகும் போதே தொடங்கி பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் உங்கள் கணணி பணியை மந்தப்படுத்தும், தாமதப்படுத்தும். எனவே தேவையற்ற புரோகிராம்கள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

4. பயர்வால் ஒன்று அவசியம் வேண்டும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் பயர்வால் கூட போதும்.

5. டூல் பார்களை அவ்வப்போது ட்யூன் செய்திட வேண்டும். தேவைப்படும் டூல் பார்களை மட்டும் இயங்க வைத்திட வேண்டும். தேவையற்ற டூல் பார்களை மூடிவிட்டால் ராம் மெமரியில் இடம் கிடைக்கும். கணணியும் வேகமாக இயங்கும்.

6. அடுத்தது தான் மிக முக்கியம். இந்த செயல்பாடு மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாதம் ஒரு முறையாவது கணணியில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012


Facebookல் பல வர்ணங்களில் சட் செய்வதற்கு

Facebook வழங்கும் பல அம்சங்களில் ஓன்லைன் சட் என்பது ஒரு முக்கியமானதும், பலராலும் விரும்பப்படுவதுமான அம்சமாகும்.
இதுவரை காலமும் கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் சட் செய்து மகிழ்ந்திருப்பீர்கள்.
ஆனால் அதைவிட மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் இப்பொழுது பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம்.
அதற்காக சில Coding காணப்படுகின்றன. அதாவது A இலிருந்து Z வரையான எழுத்துக்களுக்கு தனித்தனியாக காணப்படும் Coding மூலம் ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு வர்ணங்களையுடைய படங்களாக மாற்றப்படுகின்றன.
ஆகவே உங்களுக்கு தேவையான ஒரு சொல்லிற்குரிய ஆங்கில எழுத்துக்களை அறிந்து அதற்குரிய Codingகளை நீங்கள் தட்டச்சு செய்து Enter Keyயை அழுத்தினால் போதும் உங்கள் செய்தி கலர்புல்லாக உங்கள் நண்பரை சென்றடைந்து விடும்.
உதாரணத்திற்கு கீழுள்ள Codingகளை Copy, Paste செய்து அனுப்பிப் பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
[[112669162092780]] [[107015582669715]] [[106596672714242]] [[109294689102123]] [[115807951764667]] [[106678406038354]] [[109294689102123]] [[108634132504932]]

உங்கள் facebook பக்கத்தை பார்ப்பது யார் ? அறிய ஆவலா ?


ஒரு சில வலைப்பதிவுகளில் எத்த‌னை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப் படு வதை பார்க்க முடியும். ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவ தற்கான் வாய்ப்பில்லை.அதாவது யாரெல் லாம் நாம் பார்க்கும் இணைய பக்க த்தை பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி யில்லை.
ஹூ ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது. பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக உருவாக் க‌ப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண் டிருக்கும் அதே இணைய தளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கி ன்றனர் என்பதை காண்பிக் கிற‌து.
ஒத்த கருத்துள்ளவர்கள் பேசி மகிழ‌ பல விஷயங்கள் இருக்கும்அல்லவா?அதே போல் ஒரே தளத்தை பார்ப்பாவ்ர்களின் ஆர் வமும் ஒத்து போக‌லாம். என‌வே அந்த தளத்தில் உள்ள மற்ற இணைய வாசிகளோடு கருத்துக்களை பரிமாறி கொ ண்டு இணைய அர‌ட்டை யில் ஈடுபடலாம்.இணைய‌தளத்தை பார்த்து கொண்டே அரட்டை அடிக்கலாம் .
இணையதளத்தின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பகிர் ந்து கொள்ளலாம்.பார்த்து கொண்டிருப்பது இகாமர்ஸ் தளம் என் றால் குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு முன் அபிப்ராயம் கேட்கலாம்.இந்த பகிர்வு மூலமே புதிய இணைய நண்பர்கள் கிடை க்க‌லாம்.
பேச்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்க ளோடு உரையாடலில் ஈடுபட லாம்.
இணைய‌ அனுபவத்தை இன் னும் கொஞ்சம் செழுமையான தாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும்.இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறை யாக மாற்றி சக இணையவாசிகளொடு தொடர் பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் ஒன்று இந்த சேவையில் உறுப்பினராக இருக்கும் இணைய வாசிளை மட்டுமே பார்க்க முடியும்.பயர்பாக்ஸ் ,குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிற‌து.http://www.whoislive.com/index.html


செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!


 இலங்கையில் யாழ் இந்துக் கல்லூரியில் அப்துல் கலாம் ஆற்றிய உரை!! (ஒலி வடிவில்)
[ 2012-01-24 07:23:35 | வாசித்தோர் : 1005 ]

முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகை தந்தார். அவர் யாழ் இந்து பிரார்த்தனை மண்டபத்தில் சிறிய குறிப்புரை ஆற்றிய பின்னர் குமாரசுவாமி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சுவாமி விவேகந்தரின் ஆன்மீக வருகை, பின்னர் மகாத்த்மா காந்தியின் அகிம்சை வருகை இன்று டாக்டர் கலாமின் அறிவியல் வருகை என இந்து கல்லூரி சமூகத்தினர் இதனை சித்தரித்துள்ளனர்.

அவருடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் அஸ்வர்,திரு அசோக் காந்த இந்திய தூதுவர் , திரு மகாலிங்கம் இந்திய பிரதி தூதுவர் மற்றும் கல்லூரி அதிபர் திரு கணேசராசா அவர்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பங்குபற்றி இருந்தனர்.




செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!



பதிவேற்றும் புகைப்படங்களில் Text புகுத்தும் வசதி கூகுள் பிளஸில்... 
பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பிறிதொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் புதிதாக பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களில் Text புகுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான Text-ஐ தமிழிலும் எழுத முடியும்.
1. கீழே படத்தில் காட்டியவாறு நீங்கள் விரும்பிய படம் ஒன்றை பதிவேற்றம் செய்யவும்.
2. அடுத்து Addtext என்ற பட்டனை அழுத்தவும், இதன் போது புதிய சாளரம்(window) தோன்றும்.
3. அதில் நீங்கள் விரும்பிய Text-ஐ தட்டச்சு செய்யவும்.
4. தமிழில் எழுதவிரும்பின் கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.
5. அதன்பின் Save பட்டனை அழுத்தியபின் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் வாட்டமார்க்-ஐ உருவாக்குவதற்காகவும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தமுடியும் என்பது சிறப்பம்சமாகும்.

திங்கள், 23 ஜனவரி, 2012


விண்டோஸ் 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

நீங்கள் பயன்படுத்தும் கணணியினை தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
இருந்தும் விண்டோஸ் 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும்.
உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணணியில் சேமித்து பின் வழமையான முறையில் உங்கள் கணணியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் 
மனிதன் முறையாக தூங்கி எழுந்தால் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடன் வாழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும். ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தினமும் நேரத்திற்கு அயர்ந்து தூங்கி ஓய்வு எடுங்கள் என விஞ்ஞானிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

சனி, 21 ஜனவரி, 2012


பேஸ்புக் போட்டோக்களுக்கு சுலபமாக விதவிதமான Effects கொடுக்க

பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் பலவிதமான போட்டோக்களை நாம் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த போட்டோக்களுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக போட்டோக்களுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன ஆனால் அந்த தளங்களில் நேரடியாக பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் பேஸ்புக்கில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து அந்த தளத்தில் அப்லோட் செய்து டிசைன் பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து பிறகு பேஸ்புக்கில் அப்லோட் செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக போட்டோக்களுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.


முதலில் கீழே இந்த Mess My Photo லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளம் திறந்தவுடன் அதில் உள்ள FB Select என்பதை கிளிக் செய்யவும்.
  • முதல் தடவை என்பதால் பேஸ்புக் permission கேட்கும் அதற்க்கு முதலில் வரும் விண்டோவில் Install என்றும் அடுத்து வரும் விண்டோவில் Allow என்பதையும் கொடுக்கவும்.
  • அடுத்த விண்டோவில் உங்களின் பேஸ்புக் கணக்கில் உள்ள போட்டோக்கள் வரும் அதில் எபெக்ட் கொடுக்க விரும்பும் போட்டோவை தேர்வு செய்து கொள்ளவும்.
  • நீங்கள் தேர்வு செய்த போட்டோவில் உங்களுக்கு விருப்பமான எபெக்ட் கொடுத்து அழகாக மாற்றி கொள்ளவும்.
  • இதில் சுமார் 10 விதமான எபெக்ட் உள்ளது. உங்களுக்கு விரும்பிய எபெக்ட் கொடுத்து மாற்றியவுடன் Apply கொடுத்து FB SAVE என்ற லிங்கை அழுத்தியவுடன் இந்த புதிய போட்டோ உங்கள் பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்படும்.
திரை உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது: 66வது வயதில் எஸ்.எஸ்.வாசன் மறைந்தார்.

சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும், மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தை அடைந்தவர், வாசன். எஸ்.எஸ்.வாசன் மனைவி பெயர் பட்டம்மாள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் எஸ்.பாலசுப்பிரமணியன்; ஒரே மகள் லட்சுமி   ஜெமினியின் நிர்வாக இயக்குனராக இருந்த வாசன், இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பை பாலசுப்பிரமணியனுக்கு வழங்கினார்.
 
அலுவலகத்தில் அப்பா, மகன் என்ற பந்தமே இருந்ததில்லை. அலுவலகத்தில் எல்லோரும் வாசனை "பாஸ்" என்றே கூறுவார்கள். எனவே, பாலசுப்பிரமணியனும் அவரை "பாஸ்" என்றே அழைக்கலானார். வாசனின் இறுதி நாட்கள் பற்றி ஒரு கட்டுரையில் பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது (By:kapilan) www.locallanka.com.

வியாழன், 19 ஜனவரி, 2012

பேஸ்புக்கி​ல் உங்கள் Profile IDஐ கண்டுபிடிப்​பதற்கு

தற்போதைய காலகட்டத்தில் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் பேஸ்புக் ஆகும்.
பேஸ்புக்கில் பயன்படுத்தப்படும் பயனர் பெயர்கள்(User name) இலக்கங்களால் பிரதியிடப்பட்டிருக்கும். இது மொத்தமாக பதினைந்து இலக்கங்களை கொண்டிருந்த போதிலும் உங்கள் பேஸ்புக்கின் பக்க இலக்கமானது பன்னிரண்டு இலக்கங்களை கொண்ட எண்ணாகும்.
இப்பொழுது உங்களுடைய Profile ID ஐ தெரிந்துகொள்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
1. உங்களது பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி பேஸ்புக் பகுதிக்கு செல்லுங்கள்.
2. அதிலிருந்து உங்கள் Profile பக்கத்திற்கு செல்லுங்கள்.
3. இப்பொழுது மேலுள்ள Address Bar பாருங்கள்(URL). அதில் பின்வருமாறு காணப்படும். http://www.facebook.com/profile.php?id=123456789.
இதில் 123456789 என்று காணப்படுவதே உங்கள் Profile ID ஆகும்.
ஆனால் சிலரது Profile IDக்கு பதிலாக பயனர் பெயரே காணப்படும். எனவே இங்குதான் சற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும். அதாவது
1. உங்களது பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி பேஸ்புக் பகுதிக்கு செல்லுங்கள்.
2. இப்பொழுது Address Barஐ பின்வரும் URL ஆல் பிரதியிடுகhttps://graph.facebook.com/
3. பிரதியிட்ட URL ல் காணப்படும் "/" குறிக்கு பின்னால் உங்களது பயனர் பெயரை இட்டு(உதாரணம்:- https://graph.facebook.com/tamilwin) "Enter Key"ஐ அழுத்தவும்.
அப்போது தோன்றும் பக்கத்தில் முதலாவது வரியில் காணப்படும் தொடரிலக்கமே உங்கள் Profile ID ஆகும்.

புதன், 18 ஜனவரி, 2012


பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்! (வீடியோ இணைப்பு)

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்! (வீடியோ இணைப்பு)
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை இலகுவாக எடுக்கலாம் என்பது மட்டும் தான். ஆனால் அமெரிக்காவில் இதையெல்லாம் விட ஒரு படி தாண்டிப் போய் ஏ.டி.எம் மூலம் இன்னொரு புதிய விடயத்தையும் சாதித்துள்ளனர். ஆம், உங்களிடம் இருக்கும் பழைய செல்போனை ஏ.டி.எம் இல் செலுத்தி அதற்குரிய பணத்தை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
செல்போன் மட்டுமில்லை… பழைய mp3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றுக்கும் பணத்தினைப் பெற முடியும். அமெரிக்காவில் உள்ள பிரபல நகரான Las Vegas இல் இடம்பெற்ற சர்வதேச எலக்ரோனிக் வாடிக்கையாளர் கண்காட்சியில் தான் குறித்த ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடுதிரையுடன் கூடிய ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்பக்கத்தில் செல்போனை வைத்தால் அதனை ஸ்கான் பண்ணி அதன் விலையை எளிதாக மதிப்பிட்டு விடும்.
ழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்! அமெரிக்காவில் அதிரடி அறிமுகம்(வீடியோ இணைப்பு)
இது ஒரு சூழல் பாதுகாப்பு திட்டமாகவும் நோக்கப்படுகின்றது. பல்வேறு செல்போன் நிறுவனங்களுடனும் தொடர்புபட்டிருப்பதால் ஏ.டி.எம் மையங்கள் மூலம் சேகரிக்கப்படும் பழைய செல்போன்கள் மீள் சுழற்சிக்கு உள்ளாவது எளிதாக்கப்படுகின்றது.

விண்டோஸ் 8 அதன் பாவனையாளர்களிடம் நீண்டகால வரவேற்பை பெறும் - மைக்ரோசாப்ட்

மாநாட்டில் விண்டோஸ் 8 அதன் பாவனையாளர்களிடம் நீண்டகால வரவேற்பை பெறும் என்று தெரிவித்துள்ளார். விண்டோஸ் 8 மிகவும் இலகுவான இயங்குதளமாக இருந்தாலும் பல்துறை செயற்பாட்டையும் கொண்டதாக இருக்கும்.

மேலும் கணினியில் இன்டெல் மற்றும் ஏ.எம்.டி பிராஸஸர்களுடன் மட்டுமில்லாமல் ஸ்மாட் தொலைபேசிகள் மற்றும் Tablets களிலும் இயங்கக்கூடிய ARM தொழில்நுட்பத்திற்கு ஒத்துழைக்க கூடியதாக இருக்கும் என்கிறார் Steve Ballme.

விண்டோஸ் 7 இன் தொடக்க வேகம் 30 செக்கன் அல்லது அதற்கும் மேலென்றால் விண்டோஸ் 8 இன் தொடக்க வேகம் வெறும் 10 செக்கன்கள் கொண்டதாக இருக்குமாம்.

விண்டோஸ் 8 ஐ பற்றிய  மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்காக எம். விக்னேஸின் வலைப்பதிவிலிருந்து விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்...!!! எனும் பதிவை மீளவும் பிரசுரிக்க அனுமதித்தமைக்கு நன்றி தெரிவித்து இங்கே தருகின்றோம்.

4தமிழ்மீடியா குழுமம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் நானும் இன்னும் பயன்படுத்தவில்லை, இருந்தாலும் இணையத்தில் கிடைத்த படங்கள் மற்றும் சில விஷயங்களையும் வைத்து விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்களை பற்றி இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

1)பயனர் இடைமுகம்(User Interface)
இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.

மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2)தேடல் வசதி(Search)

மேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.

3)குறைவான துவக்க நேரம்(Less Start up time)
இதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான், மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8ல் இயங்குவதாக கூறுகின்றனர்.

4)மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோரர்(windows explorer)
இதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் செலக்ட் செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை செலக்ட் செய்தால் ப்ளே வித் ஆப்ஷனும் மற்ற ஆப்ஷன்களும், நீங்கள் ZIP கோப்பை செலக்ட் செய்தால் ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.

5)இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10)


இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ் இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.

6)மார்க்கெட் ஸ்டோர்(Market)
விண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளதாம், இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது இந்த சோதனை பதிப்பில் இணைக்கப்படவில்லை.

7)லைவ் சின்க்ரோனைஷேசன்(Live sync)
இதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது டேட்டாக்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.

பின்னர் நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது, இந்தியர்களான நாம் இந்த சிங்க் மற்றும் கூகுள் க்ரோம் இயங்குதளத்தை பயன்படுத்தும் அளவிற்கு தேவையான இணைய வேகத்தை இன்னும் அடையவில்லை என்றே கருதுகிறேன், மற்ற நாடுகளுக்கு இந்த வசதி ஒரு அரிய வரப்பிரசாதம்..

இவ்வளவையும் படித்தபிறகு உங்களுக்கு விண்டோஸ் 8 பயன்படுத்தி பார்க்க எண்ணம் வரலாம், சோதனை பதிப்பிற்கான தரவிறக்க சுட்டி இங்கே..
பதிவின் மூலம் - http://vigneshms.blogspot.com/2011/09/8.html
124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com