திங்கள், 7 நவம்பர், 2011
Posted on 2:08 AM by piragasart
| திருடர்களின் கைவரிசைக்கு பேஸ்புக் துணைபோகிறது. |
திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டுவதற்கு பேஸ்புக்கை உபயோகிப்பதாக தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கில் வழங்கப்படும் தகவல்களை சாதமாகப் பாவித்து களவாடப் போகும் இடத்தில் உரிமையாளர்கள் இல்லை என்பதை பேஸ்புக்கின் மூலமாக தெரிந்து கொள்கின்றனர். பேஸ்புக்கை உபயோகிப்பவர்கள் தங்களது தகவல்களை தங்களது நண்பர்களுக்கு தெரிவிக்கின்றனர். தாம் தற்போது எங்கே இருக்கிறோம், எப்போது தமது இல்லங்களுக்கு செல்வோம் என்பதனை தெரிவிக்கின்றனர். இத்தகவல்கள் திருடர்களுக்கு பெரும் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். |
குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திருட்டை நடத்துவதற்கு திருடர்களுக்கு 10 நிமிடங்களுக்கு குறைவாகவே செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர். மக்களின் அலட்சியம் காரணமாகவும் திருட்டு நடைபெறுவதற்குக் காரணமாய் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். கதவுகளில் சாவிகளை விட்டுவைப்பதும், யன்னல்களை திறந்து வைப்பது, பொதிகளை மற்றவர்களுடைய பார்வைக்கு தெரியும் படியாக வைத்தல், போன்றவை திருடர்கள் தமக்கு வழங்கப்பட்ட அரிய வாய்ப்பெனக் கருதி தமது கைவரிசயைக் காட்டுகின்றனர் என குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் தெரிவிக்கின்றனர். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply