சனி, 31 மார்ச், 2012


கச்சதீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியதாக தமிழ்நாடு மீனவர்கள் புகார்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 05:29.10 AM GMT +05:30 ]
தமிழ்நாட்டின் தீவு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

புதன், 21 மார்ச், 2012

தாமத்தியம் தழைக்க தங்கமான சில யோசனைகள்

#    தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.
யாழ். நகரில் வாள் வெட்டு- கணவன், மனைவி படுகாயம்!


யாழ்ப்பாணம், குருநகர் திருநகர் இராஜேந்திரா பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  திருநகர் இராஜேந்திரா பகுதியிலுள்ளவீடொன்றினுள் புகுந்த 15 பேர் கொண்ட குழுவினரே  வாள்வெட்டை மேற்கொண்டனர்.

யாழில் “சுதந்திர சோழர் படையணி”யின் எச்சரிக்கை துண்டுப்பிரசும்.

“சுதந்திர சோழர் படையணி” என்று உரிமைகோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் “யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள்!”என்று குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், 

செவ்வாய், 20 மார்ச், 2012


விதி படப் பாணியில் யாழில் பெண் ஒருவர் போராட்டம் ! ஏமாற்றப்பட்ட பெண்

தன்னை ஏமாற்றிய இளைஞர் ஒருவருக்கு எதிராக, யாழ் பெண் ஒருவர் ஊடகப் போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். பேஸ்புக் தொடக்கம் அனைத்து ஊடகங்களின் உதவியை இவர் நாடியுள்ளார். வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !

நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்து இருக்கின்ற இளைஞனுக்கு எதிராக பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார் யாழ்ப்பாணத்தில் மட்டுவிலைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர்.
அமெரிக்காவின் பிரேரணை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாதகமாக அமையும்: இலங்கை எச்சரிக்கை
[ புதன்கிழமை, 21 மார்ச் 2012, 03:39.36 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை முற்றுமுலுதாக திசை திருப்பும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் செயற்பாடு கானப்படுகின்றது.


தொழிநுட்ப செய்திகள்


ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 02:14.49 மு.ப GMT ]
கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.

புதிது செய்திகள்


தெல்லிப்பழைப் பகுதியில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திங்கள், 19 மார்ச், 2012


சிறந்த 100 மென்பொருட்கள்

உபுண்டு/லினக்ஸ் கணினிகளுக்கு தேவையான சிறந்த 100 மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய


இயங்கு தளம் என்பது கணினியின் நாடித்துடிப்பாகும். இந்த இயங்கு தளங்கள் இருந்தாலே நாம் கணினியை இயக்க முடியும். இயங்கு தளங்களில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் இயங்கு தளமாகும். இந்த இயங்கு தளங்களின் வரிசையில் லினக்ஸ் இயங்கு 

ஞாயிறு, 18 மார்ச், 2012


Label and Star: ஜிமெயிலின் புதிய வசதி
[ ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 02:02.44 பி.ப GMT ]
உலகம் முழுவதும் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் ஜிமெயில் ஆகும்.
எனவே ஜிமெயில் தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. தற்போது ஜிமெயிலில் ஏதாவது ஒரு மின்னஞ்சலை அனுப்புவதற்கு முன் அந்த மின்னஞ்சலுக்கு label மற்றும் star பொருத்தி கொள்ளலாம்.
இந்த புதிய வசதியினால் எத்தனை நாள் கழித்து நீங்கள் மின்னஞ்சலை பார்த்தாலும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இதற்கு முதலில் ஜிமெயிலின் Compose பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கு உங்களுடைய செய்தியை டைப் செய்து விட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்து விடவும்.
அங்கு labels என்ற புதிய பட்டன் ஒன்று இருக்கும், அதில் உங்களுக்கு விருப்பமான label தெரிவு செய்து கொள்ளுங்கள் அல்லது புதிதாகவும் label உருவாக்கில் கொண்டு தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் Send பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள்.
இனி அந்த மின்னஞ்சலுக்கு பதில் வந்தால் குறிப்பிட்ட லேபிளில் பார்த்தவுடன் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சிறிய வசதி என்றாலும் ஒரே நாளில் நூற்றுக்கும் மேலான மின்னஞ்சல்களை Receive செய்பவர்களுக்கு இந்த வசதி மிக மிக பயனுள்ள வசதி.

சனி, 17 மார்ச், 2012


நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்காணிப்பதற்கு

உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து வைத்திருக்கும். அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்:
Record Each Keystroke: கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.
Instant Chat Messages Recording: பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
Track Emails: கணணியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.
Monitor Websites: கணணியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது.
Review Every Downloaded File: தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
கூகுளின் புதிய டேப்லெட்

கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவருகிறது. இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இந்த டேப்லெட்டை 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.
கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இந்த டேப்லெட் இயக்கும் சக்தி கொண்டது.
கூகுள் இந்த டேப்லெட்டைத் தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.
ஆனால் இறுதியில் இப்போது ஆசஸிடம் கூட்டணி வைத்திருக்கிறது.
இந்த புதிய டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Interest: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி

உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும்.
எனவே பேஸ்புக் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. தற்போது பேஸ்புக்கில் Interest வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் உங்களுக்கு மிகவும் விருப்பமான நபர்களின் பகிர்வுகளை மட்டும் பார்க்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் இடது பக்கத்தில் கீழ் பகுதியில் Interest என்ற புதிய வசதி இருக்கும், அதன் மீது க்ளிக் செய்யவும்.
அடுத்ததாக ஓபன் ஆகும் விண்டோவில் CREATE LIST என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும், அதில் நீங்கள் பின்தொடரும் பக்கங்கள், நண்பர்கள், Subscribe செய்யும் பட்டியல் இருக்கும் காணப்படும்.
அதில் உங்களுக்கு பிடித்த நபர்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளவும்.
உங்களுக்கு பிடித்த நண்பர்களை தெரிவு செய்தவுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து ஓபனாகும் விண்டோவில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கொடுத்து உங்கள் பட்டியல் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.
அடுத்து கீழே உள்ள Done என்பதை க்ளிக் செய்தால் போதும் தெரிவு செய்தவர்களின் பதிவுகளை மட்டும் இனி தனியாக பார்த்து கொள்ளலாம்.
கூகுள் தேடலின் சிறப்பம்சங்கள்

மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள கூகுள் ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
கூகுள் தேடல் விண்டோவினை கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது.
94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.
ஒரு சிலர் நாம் எதனைக் கொடுத்தாலும் சரியாக அதனை மட்டும் கொடுக்காமல் சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி அமைக்கலாம்.
அவற்றில் சில:
+ என்று கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும் படி அமைக்கலாம். எ.கா.––netbook
+11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech
* இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால்(*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.
~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன்படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சியாக வேண்டுமா? எடுத்துக்காட்டாக விலை ரேஞ்ச், திகதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15
குறிப்பிட்ட கோப்பு வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத். தரலாம்.
ஓர் இணையத்தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.
site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.

வெள்ளி, 16 மார்ச், 2012


புளுடூத் 4 தொழில்நுட்பம் குறித்த தகவல்கள்

வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில்நுட்பம்(Bluetooth Technology) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதியாக இருந்தது. இருப்பினும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது.
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்களை இணைப்பதில் சிக்கல், கடவுச்சொல் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல் மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில்நுட்பம் தீர்த்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் தகவல்களினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பற்றரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் ட்ரெட்மில் போன்ற தனி நபர் உடல் நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
இதற்கு அடுத்ததாக என்.எப்.சி எனப்படும் அண்மைக்கள தகவல் பரிமாற்றம்(Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில்நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.
மடிக்கணணி, கைபேசி மற்றும் Router போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும்.
இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்களை இந்த தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

புதன், 14 மார்ச், 2012


இணையத்தளம் ஒன்றை குறிப்பிட்​ட நேரம் முடக்கிவைப்​பதற்கு
[
மாபெரும் தகவல் களஞ்சியமாக விளங்கும் இணையமானது பல்வேறு வழிகளில் நன்மை பயக்குகின்றபோதும் சில சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துவதுண்டு.
இதனால் அவ்வாறான இணையத்தளங்களை நாம் நிரந்தரமாக எமது கணினியில் முடக்குவதற்கு வசதி உண்டு. அதேபோல சில இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இந்த மென்பொருளை நிறுவி உங்கள் கணினியில் நிறுவி கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பிய இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்க முடியும்.
இங்குள்ள இணைப்பிற்கு (http://www.focalfilter.com/) சென்று FocalFilter மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்க. இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.
2.அதன்பின் தோன்றும் விண்டோவில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3.பின்னர் தோன்றும் விண்டோவில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் பொப்பப் மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும்.
தரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களி​லுருந்து NTFSற்கு மாற்றுவதற்​கு

கணினிகளைப் பயன்படுத்தும்போது அதில் பயன்படுத்தப்படும் கோப்புவகைகளைப்பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இங்கு floppy disks, hard disk, optical disk போன்றவற்றில் தரவுகள் சேமிக்கப்படும்.
எனினும் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி இத்தரவுகள் சேமிக்கப்படும்போது பொதுவாக FAT32, NTFS போன்ற இரண்டுவகையான கோப்பு வகைகள் காணப்படுகின்றன.
எனவே தேவைக்கு ஏற்ப FAT32 கோப்புக்களிலுருந்து NTFS ற்கு மாற்றம் செய்துகொள்ள முடியும். இதன்போது சில சந்தர்ப்பங்களில் தரவுகளை இழக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே தரவு இழப்பை தவிர்த்து FAT32 கோப்புக்களிலுருந்து NTFS ற்கு மாற்றுவதற்கு கீழ்வரும் முறைகளை பின்பற்றுக.
1. முதலில் மாற்றவேண்டிய கோப்புக்கள் உள்ள வன்றட்டின் பெயரை குறித்துக்கொள்க.
2. படத்தில் காட்டியவாறு CMD ஐ Run As Administratorல் செயற்படுத்தவும்.
3.தற்போது ஏதாவது கோளாறுகள் உள்ளனவா என “chkdsk G: /f “ கட்டளையை பயன்படுத்தவும்.(இங்கு G என்பது வன்றட்டின் பகுதியாகும்
4.தொடர்ந்து “Convert G: /FS:NTFS”எனும் கட்டளையை செயற்படுத்துக.
5.கோப்புக்ள் முற்றாக மாற்றப்பட்டதும் command promptல் Conversion Complete என்றவாறு தோன்றும். இதிலிருந்து உங்கள் கோப்புக்கள் FAT32 இலிருந்து NTFS ற்கு மாற்றப்பட்டுவிட்டது.

திங்கள், 12 மார்ச், 2012


Online மூலம் திரட்டப்படும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான இலகு வழி 

இணையத்தில் உலாவரும் நமக்கு ஆன்லைன் மூலம் எப்படி எல்லாம் நம் தகவல்கள் திருடப்படுகிறது இதை தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு தெளிவாக சொல்கிறது கூகிள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பல நேரங்களில் நம் இமெயில் மட்டுமின்றி இணையதளத்தின் தகவல்களும் திருடப்படுகிறது எப்படி நம் தகவல்களை எடுக்கின்றனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயம், பலருக்கு புரியாமல் விளங்காமல் இருந்த இந்த கேள்விகள் அத்தனைக்கும் கூகிளே நேரடியாக பதில் சொல்கிறது.
இணையத்தில் எப்படி நாம் தகவல்களை சேமிக்கிறோம், எங்கெல்லாம் தகவல்கள் எப்படி எல்லாம் பரிமாறப்படுகிறது என்பதை தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்வதற்காக கூகிள் Google to Know என்ற சிறப்பு பக்கத்தை உருவக்கியுள்ளனர். இமெயில் முதல் இணையம் வரை எப்படி எல்லாம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக ஒவ்வொரு படியாக சொல்லித்தருகின்றனர், இண்டர்நெட் பயன்படுத்தும் புதியவர்கள் முதல் ஏற்கனவே இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்களுடனே சொல்கின்றனர்.
ஒருவருக்கு தேவையில்லை என்று விடும் தகவல்கள் கூட அடுத்தவருக்கு தேவையானதாக இருக்கலாம். கூகிளின் இந்த பாதுகாப்பு வழிமுறையை அனைவரிடமும் எடுத்துச்செல்லுங்கள், இணையத்தில் பாதுகாப்பாக வலம் வர அனைவருக்கும் உதவும்.
கூகிள் ஒரு ரகசிய உளவாளி : கூகிள் எர்த் மூலம் எளிதாக கணித அடிப்படையை புரியவைக்கும் பயனுள்ள தளம்.
கூகிளின் எல்லாப் பொருட்களிலும் ஒரே நேரத்தில் தேட கூகிள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய தளம். கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

ஞாயிறு, 11 மார்ச், 2012


தகவல்களை ஒழுங்கான முறையில் வகைப்படுத்துவதற்கு

Microsoft Office word-ல் தகவல்களை முறைப்படுத்தி தருவதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒரு Table-ஆக அமையப் பெற்றால், இன்னும் தெளிவான முறையில் அனைவருக்கும் புரியும்.
பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே Table-ஆக மாற்ற முடியும். இதற்கான எளிய வழிகளை Microsoft Office word கொண்டுள்ளது.
1. முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Tables group-ல் உள்ள Table ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Convert Text To Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Table மெனு சென்று, அதில் Convert என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
2. பின்னர் கிடைக்கும் துணை மெனுவில் Text To Table என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து ஓகே கிளிக் செய்திட, பட்டியலில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி  Table அமைக்கப்பட்டு கிடைக்கும்.
பெரும்பாலான நேரங்களில் நாம் எதிர்பார்த்த வகையில், Table-கள் இருக்காது. எனவே சில சிறிய மாற்றங்களை அகலத்தை அதிகப்படுத்துவது, உயரத்தைக் குறைப்பது போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதற்கு Table Menu-ல் கொடுக்கப்பட்டுள்ள Table Template-களைப் பெற்று நமக்குப் பிடித்தமான Table Format-ஐ தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
Table வேண்டாம் என எந்த கணத்தில் முடிவு செய்தாலும், Table Menu சென்று Convert To Text தேர்ந்தெடுக்க Table மீண்டும் Text-ஆக அமைக்கப்படும்.

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்]


இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.


இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Window ஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம். 
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.

மற்ற நாடுகளில் சப்போர்ட் செய்யும் மொபைல் நிறுவனங்களை அறிய-Support Operators

சனி, 10 மார்ச், 2012



Chat for Google: நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012, 02:08.51 மு.ப GMT ]
இணையத்தில் பெரும்பாலான நபர்கள் உபயோகிப்பது ஜிமெயில் தான். அதே போன்று கூகுள் பிளஸ் தளமும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.
இவை இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான வசதி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் chat வசதியாகும். இதுவரை இந்த தளங்களுக்கு சென்று தான் அதில் ஓன்லைனில் உள்ள நண்பர்களிடம் சாட் செய்து வந்தோம்.
இனி நீங்கள் சாட் செய்ய அந்தந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அந்த தளங்களை திறக்காமலே ஜிமெயில் மற்றும் கூகுள்+ நண்பர்களுடன் சாட் செய்யலாம்.
குரோம் பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.
முதலில் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து Chat for Google என்ற நீட்சியை நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் உலவியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
நீட்சி உங்கள் உலவியில் இணைந்தவுடன் குரோம் பார் அல்லது system tray பகுதியில் உள்ள ஐகானை க்ளிக் செய்யவும்.
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கூகுள் கணக்கில் நுழைந்து இருந்தால் அந்த கணக்கில் உள்ள நண்பர்களை காட்டும். இல்லை எனில் கூகுள் கணக்கில் நுழைய Sign In வசதியை காட்டும்.
அதில் நுழைந்து உங்கள் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம்.

Default Browser-ஐ மாற்றம் செய்வதற்கு

விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்தே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் உலாவியாகப்(Default Browser) பதியப்படுகிறது. ஆனால் அதைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.
வேறு விதமான உலாவியையும் தரவிறக்கம் செய்து அதனையே மாறாத உலாவியாக செட் செய்யலாம். இவ்வகையில் பயர்பொக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
இவை தவிர இன்னும் பல உலாவிகளும் உள்ளன. இவற்றை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் டிபால்ட் உலாவியாக செட் செய்வதற்கு பயர்பொக்ஸ் உலாவியில் Tools/Options சென்று General என்பதன் கீழ் Default Browser என்று உள்ள இடத்திற்கு எதிராக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
நெட்ஸ்கேப் எனில் என்.எஸ். நேவிகேட்டரில் Edit / Preferences தேர்ந்தெடுத்து மேலாக வலது மூலையில் உள்ள “Set Default Browser” என்பதில் கிளிக் செய்திடவும்.
ஆப்பராவில் Tools / Preferences சென்று “Advanced” டேப் செலக்ட் செய்திடவும். இதில் “Programs” என்பதன் கீழ் “Check if Opera is default browser on startup” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
வேறு உலாவியை டிபால்ட் உலாவியாக செட் செய்து பயன்படுத்திய பின்னர் வேறு சில காரணங்களுக்காக இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மீண்டும் டிபால்ட் உலாவியாக அமைத்திட விரும்பினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, அதில் Tools / Internet Options / Programs என்று செல்லவும்.
பின் “Reset Web Settings” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் “Internet Explorer should check” என்பதில் கிளிக் செய்திடவும்.

புதன், 7 மார்ச், 2012


கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு

கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.
அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.
கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.
இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.
124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com