வெள்ளி, 20 ஜூலை, 2012

MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்


தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.
மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும்,  தோன்றும் விண்டோவில் மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும்.
தெரிவு செய்தவுடன், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, Process என்ற பட்டனை அழுத்தினால் போதும். உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
அடுத்து வரும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும், மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.

இணையப் பக்கங்களின் பின்னணிச் சூழலை மாற்றி அமைப்​பதற்கு


சில வகையான இணையத்தளங்களினை பார்வையிடும் போது, அவற்றின் பின்னணியின் அதிகளவு வெளிச்சம் காணப்படுவதனால் குறித்த இணையத்தை சீராக பார்வையிட முடியாமல் போகலாம்.
இதனைத் தவிர்ப்பதற்குரிய வசதியை கூகுள் குரோம் தந்துள்ளது.
அதாவது High Contrast எனும் நீட்சியினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்வதன் மூலம் தேவைக்கு ஏற்றாற் போல் இணையப்பக்கங்களின் பின்னணி வெளிச்சத்தினை மாற்றியமைக்க முடியும்.
இவ்வாறு வெளிச்சங்களை மாற்றியமைப்பதற்கென Normal, Increase Contrast, Grayscale, Iverted Color, Inverted Grayscale ஆகிய தெரிவுகள் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Torrent கோப்புக்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்ய


இணையத்தளங்களிருந்து மென்பொருட்கள் போன்ற கோப்புக்களை Torrent கோப்புக்களாக தரவிறக்கம் செய்வதற்கு Bit Torrent எனும் மென்பொருள் பயன்படுகின்றது.
எனினும் தற்போது இம்மென்பொருளைத் தவிர கூகுள் குரோம் உலாவியினூடு நேரடியாக Torrent கோப்புக்களைத் தரவிறக்கம் செய்வதற்கென வசதியினை One Click for Chrome எனும் நீட்சி தருகின்றது.
இந்நீட்சியானது விண்டோஸ், லினக்ஸ், மக் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Office 2013 விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டாவில் இயங்காது: பயனாளர்கள் அதிர்ச்சி


சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது Office 2013-ன் டெமோ பதிப்பை வெளியிட்டது.
ஆனால் இந்த பதிப்பு விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது, பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அதன் பயனாளர்களை கட்டாயமாக விண்டோஸ் 7 அல்லது 8 ஐ உபயோகிக்க செய்வதே நோக்கமாக உள்ளது என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இருப்பினும் Office 2013 பதிப்பை மேம்படுத்துவதற்கு $ 39,99 என்ற குறைந்த விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரகசியமாகக் கண்காணிக்க வேண்டுமா?





இப்போது நீங்கள் யாரையாவது இரகசியமாக அவருக்குத் தெரியாமல் அவருடைய நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்து விட்டது. வயர்லெஸ் வீடியோ கெமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்த படியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கெமராவை ஒட்டி விட்டால் போதுமானது.

நேட்வேர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவோடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரோனிக் கண்காட்சியில், இந்த நவீன வீடியோ கெமரா காட்சிக்கு வைக்கப்பட்டது, அந்த கெமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில், நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும்.

                 இந்த கெமராவின் தொழில்நுட்ப முறை ‘அவாக்’ என்று அழைக்கப்படுகிறது, இந்தக் கெமரா மிகவும் சிறிய வடிவிலானது. பற்றரியில் செயல்படக் கூடியது. வயர்லெஸ் வீடியோ கெமராவாகவும், வயர்லெஸ் வீடியோ கெமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

இதை சுவர்களிலோ , வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால் போதுமானது. இணையத்தளத்தின் அடிப்படையில் இந்த கெமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். இதைத் தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். இதைப் பொருத்துவது மிகவும் எளிதானது. இதைப் பொருத்துவதற்கு வயர்கள் தேவையில்லை. புதிதாக மென்பொருளையும் இணைக்கத் தேவையில்லை. 

செவ்வாய், 26 ஜூன், 2012

கணினி மொழிகள்





கணினி மொழிகள் என்பதை நிரல் ஏற்பு மொழி என தூய தமிழில் அழைக்கிறார்கள். இது கட்டளைகளின் மூலம் கணினியைச் செயல்பட வைப்பதாகும். சிறு கணினியின் ஒரு சின்ன செயற்பாடு முதல் ஒரு எந்திரனின் செயற்பாடு (Robot)வரை நிர்ணயம் செய்வது கணினி மொழிகள்தான்.

கணினி மொழிகளை உருவாக்குபவர்களை மென்பொறியாளர்கள் (software engineer) என அழைக்கிறோம்.

ஓவ்வொரு வருடமும் ஏராளமான புதிய கணினி மொழிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தற்போதைய நிரல் ஏற்பு மொழிகள் பயன்பாட்டு எளிமைக்காக ஆங்கில வாக்கியங்களாகவோ , வார்த்தைகளாகவோ இருக்கின்றன. இந்த நிரல் ஏற்பு மொழிகள் கணினியிலுள்ள இயந்திர மனசுக்குப் புரியும் விதமாக கொம்பைலர் (compiler) மென்பொருட்களால் இயந்திர மொழியாய் மாற்றப்பட்டு கணினியை செயல்பட வைக்கிறது என்பது அடிப்படை செயற்பாடாகும்.

C++, Java போன்றவை இப்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள கணினி மொழிகளில் சிலவாகும். ஓவ்வொரு இயக்கு தளத்திற்கும் ஏற்பு கணினி மொழிகளும் வேறுபடும். இந்த நிரல் ஏற்பு மொழிகள் இல்லாமல் கணினியே இல்லை எனும் நிலை இருப்பதால்தான் இன்று மென்பொருள் நிறுவனங்கள் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன.
 

கணினி தொடர்ந்தியங்க 10 வழிமுறைகள்






கம்ப்யூட்டர் நம் வாழ்வின் இணையாக, தோழனாக, இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. எம் உடல் நலனைப் பாதுகாப்பது போல இதனையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.அதற்கான சில குறிப்புகள்

01. ஆண்ட்டி வைரஸ்

கம்ப்யூட்டர் இயங்கும் போது எப்போதும் வைரஸ் தடுப்பு தொகுப்பு ஒன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் இந்த தடுப்பு தொகுப்புகளைப் பெறலாம். இவற்றை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்தல் மிக முக்கியமானது. அப்போதுதான், அன்றாடம் உருவாகும் வைரஸ்கள் மற்றும் கெடுக்கும், தகவல் திருடும் தொகுப்புகளிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இலவச தடுப்பு திட்டங்கள் பல கிடைத்தாலும்,

கீழ்க்கண்டவை நிலையான நல்ல பயன்பாட்டைத் தருவது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

1.   ஏவிஜி ஆண்ட்டி வைரஸ்(AVG Antivirus):                                                           http://www.avg.com/inen/liteproductavgantivirusfree

2. அவிரா பேசனல் பிரீ ஆண்ட்டி வைரஸ் (Avira Personal Anti Virus)http://www.freeav.com/en/download/1/download_avira_antivir_personal_free_antivirus.html.)
3.அவாஸ்ட் ஹோம் எடிஷன் பிரி ஆண்ட்டி வைரஸ் (Avast Home Edition Free Antivirus):http://www.avast. com/eng/avast_4_home.html)

02. பயர் வோல் 

ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன், திருட்டுத்தனமாக நம் கம்ப்யூட்டர்களுக்குள் நுழைய வரும் புரோகிராம்களைத் தடுக்கும் பயர்வோல் அமைப்பினை, நம் கம்ப்யூட்டர்களில் அமைக்க வேண்டும்.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைப் போலவே, இணையத்தில் இலவச பயர்வோல் தொகுப்புகளும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

              1.  ஸோன்அலார்ம்பிரீபயர்வால் (Zone Alarm Free Firewall) :http://www.zonealarm.com.

              2.   பிசி டூல்ஸ் பயர்வால் ப்ளஸ் (PC Tools Firewall Plus) http://www.pctools.com/firewall/

            3. கொமொடோ இன்டர்நெட் செக்யூரிட்டி(Comodo Internet Security) http://personalfirewall. comdo.com/

03. நாள் பட்ட பைல் நீக்கம்

பாதுகாப்பு தொகுப்புகளை நிறுவிய பின், நாம் எப்படி எம் கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கிறோம் என்பதனை எண்ணிப் பார்த்து, அவற்றை நீக்குதல் நலம் தரும்.

வெகுநாட்களாகப் பயன்படுத்தாத கோப்புகள், ஒரே பெயரில், பல ட்ரைவ்களில் சேமிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் சில ஆவணக் கோப்புகள், திருத்தி அமைத்த பின்னும், அதன் பழைய ஆவணக் கோப்புகள், இணையத்தில் செல்கையில் இறக்கப்படும் தற்காலிகக் கோப்புகள் எனப் பல கோப்புகளை நாம் ஹார்ட் டிஸ்க்கில் வைத்து, கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை மட்டுப் படுத்துகிறோம்.

இதே போல் அழிக்கப்படும் பைல்கள் எப்போதும் ரீசைக்கிள் பின் நிறைந்து வழியும் வகையில் நிரப்புகிறோம். ஒரே சொப்ட்வயா அப்ளிகேஷன் சார்ந்த பழைய பதிப்புகளின் மூலக் கோப்புகளைத் தேவையில்லாமல் வைத்திருக்கிறோம்.

வாரம் அல்லது மாதம் ஒருமுறை இவற்றை நீக்கினால், கம்ப்யூட்டர் நலமாக, அதிகப் பயன்தரும் வகையில் இயங்கும்.

04. ரெஜிஸ்ட்ரி சுத்தம் செய்திடுக

தேவைப்படாத சொப்ட்வயா அப்ளிகேஷன்களை நீக்கினாலும், இவை ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்திய பல நூறு வரிகள், அப்படியே தங்கி, நம் இயக்க வேகத்தினைக் குறைக்கும். நாமாக இவற்றை நீக்க முயன்றால், ரெஜிஸ்ட்ரிக்குப் பாதிப்பு ஏற்பட்டு, இயக்க வேகம் குறையும். இவற்றை நீக்க இணையத்தில் இலவச ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் கிடைக்கின்றன.

இவற்றில் சில கிடைக்கும் முகவரிகளை இங்கு காணலாம்.

1.ரெஜிஸ்ட்ரி மெக்கானிக்(Registry mechanic)    :http://www.pctools. com./registrymechanic)

2.ரெஜிஸ் ட்ரி ஈஸி (Registry Easy):http: //www.regeasy cleaner.com

3.ரெஜிஸ்ட்ரி பிக்ஸ் (Registry Fix):http ://www.registryfix. com

05. ஸ்பைவேர் தொகுப்பு இயக்குதல்

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மற்றும் பயர்வோல் தொகுப்புகளைப் போல, நம் கம்ப்யூட்டரில் நாம் அறியாமல் வந்திறங்கும், நம் பேசனல் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் தொகுப்புகளையும் நாம் பதிந்து இயக்க வேண்டும்.

ஸ்பைவேர், மால்வேர், அட்வேர் எனப் பல பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இந்த வகை புரோகிராம்களும் கம்ப்யூட்டர் இயக்கத்தினை மட்டுப்படுத்தும். தகவல்களைத் திருடும் பட்சத்தில், பெரிய அளவில் இழப்பையும் ஏற்படுத்தும்.

இலவச ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கும் தள முகவரிகள் கீழே தரப்படுகின்றன.

1. அட் அவேர் பிரீ (AdAware Free) :http://www.lavasoft. com/ products/ad_ aware_free.php

2. ஸ்பைஸ்பாட் சர்ச் அண்ட் டெஸ்ட்ராய் (Spyspot Search & Destroy):http://www.safernetworking.org/en/ spybotsd/index.html

3. விண்டோஸ் டிபண்டர் (Windows Defender)http://www. microsoft. com/windows /products /winfamily/ defender/ default.mspx மேலே கூறப்பட்டுள்ள பலவகை இலவச புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன், அவை குறித்து அந்த தளங்கள் தரும் குறிப்புகளைப் படிக்கவும். உங்கள் தேவைகளுக்கு எந்த புரோகிராம் உதவுமோ, உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரின் வடிவமைப்பிற்கு எது உகந்ததாக இருக்குமோ, அதனை டவுண்லோட் செய்திடவும்.

06. அற்றைப்படுத்துதல்(Updating)

கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அன்றைய புதுப்பிக்கப்பட்ட வழிகளைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும். பொதுவாக இத்தகைய புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டர் இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், தாமாகவே அவற்றின் தாய் தளம் சென்று, அற்றைப் படுத்தலுக்கான கோப்புகள் இருந்தால், சில உங்களுக்கு தகவல் தந்து, அனுமதி கேட்டு அப்டேட் செய்திடும். சில புரோகிராம்கள் தாங்களாகவே அப்டேட் செய்திடும். இதில் எது உங்களுக்குச் சரி எனத் தோன்றுகிறதோ, அதன்படி அவற்றை அமைத்து இயக்கலாம்.

07.ராம் நினைவகத் திறன் கூட்டல்

கம்ப்யூட்டர் இயக்கத்தில் மையமாக இயங்குவது ராம் மெமரி (RAM Memory) எனப்படும் நினைவகமாகும். இங்கு தான் நம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், நாம் தயாரிக்கும் பைல்கள் தங்கி இயங்குகின்றன.

நாம் கம்ப்யூட்டர் வாங்கும் போது போதுமானதாகத் தோன்றும் இவை, நாளுக்கு நாள் வரும் புதிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும். இதனால் கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் குறையும். எனவே, இந்த மெமரியின் கொள்ளளவினை அதிகப்படுத்த வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரில் என்ன வகை ராம் உள்ளது என்று கண்டறிந்து, எப்படிப்பட்ட ராம் மெமரி சிப்பை வாங்கினால், கம்ப்யூட்டரின் மதர்போர்டில் இணைக்க முடியும் என்று அறிந்து, அதனை வாங்கி இணைக்கவும்.

08. கோப்புகள் பாதுகாப்பு

கம்ப்யூட்டர்கள் எந்த நேரத்திலும் செயல் இழந்து முடங்கிப் போகும் என்பதால், நாம் அவற்றில் உருவாக்கும் முக்கிய கோப்புகளுக்கு, உபரி நகல் ஒன்று உருவாக்கி, அவற்றைப் பாதுகாப்பாக பதிந்து வைக்க வேண்டும். சிடி, டிவிடி, பிளாஷ் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு ட்ரைவ் எனப் பலவகைகளில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

09. தூய்மைப்படுத்தல்

இப்போதெல்லாம், மூடிய குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே கம்ப்யூட்டர் இயக்கப்படுவதில்லை. சாலை ஓரங்களில் இயங்கும் பலசரக்கு கடைகளில் பாருங்கள். கிலோ கணக்கில் பறக்கும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயக்கப்படுகின்றன.

வீடுகளிலும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயங்குகின்றன. எனவே எந்த அளவிற்கு தூசு அதிகமோ, அவ்வளவு குறைந்த நாட்கள் இடைவெளியில், கம்ப்யூட்டரைத் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டு, சிபியு, மதர்போர்டு உள்ள டவர், மவுஸ், ஸ்கேனர், பிரிண்டர் என அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும்.

10. தொடர் மின் வழங்கல்

மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால், கம்ப்யூட்டர்களின் இயக்கம் திடீரென நின்று போகும். இது கெடுதலை விளைவிக்கும். எனவே நல்ல யு.பி.எஸ். ஒன்றுடன் இணைத்து மட்டுமே கம்ப்யூட்டரை இயக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்களின் இயக்கத்தை எப்போதும் முறைப்படி நிறுத்த வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக, அதற்கு மின் இணைப்பு தரும் சுவிட்ச் ஓப் செய்யக் கூடாது.

திங்கள், 25 ஜூன், 2012

போலியான கோப்புகளை அழிக்க இலவச மென்பொருள்






ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் MP3, Image வடிவில் காணப்படும். அவைகள் உங்கள் கணணியின் இடத்தை அடைத்து விடும்.

இதனால் உங்கள் கணணியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளை வைத்து மிகவும் சுலபமாக தேடி கண்டுபிடித்து போலியான கோப்புகளை அழித்து விடலாம். இவற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம்.

IMAGES, AUDIO FILES, VIDEO FILES, ARCHIVES, APPLICATIONS போன்ற கோப்புகளை இந்த மென்பொருள் மூலம் அழிக்கலாம். இது ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும்.

       http://www.auslogics.com/en/software/duplicate-file-finder/ இந்த லிங்கினூடாக மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

புகைப்படங்களை மட்டும் பதிவேற்ற ஒரு இணையத்தளம்





புகைப்படங்களுக்கென்றே ஒரு டிவிட்டர் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?அதாவது வார்த்தைகளில் பதிவிடாமல் காட்சிரீதியாக பதிவிட விரும்பினால் பான்கா இணையதளம் அதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பான்காவை புகைப்படங்களூக்கான டிவிட்டர் என்று சொல்லலாம். டிவிட்டரில் அதிகப்டசமாக 140 எழுத்துக்களைப் பதிவு செய்வதை போல இதன் மூலம் புகைப்ப‌டங்களை பதிவிடலாம்.

புகைப்படப்பிரியர்களுக்காக‌ பிளிக்கர் போன்ற புகைப்பட பகிர்வு சேவைகள் இருக்கின்றன.அவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபட்டதாக இந்த சேவை அறிமுகாகியுள்ளது.இந்த தளத்தில் ஐபோன் மற்றும் ஆன்டிராய்டு போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

எப்படி டிவிட்டர் தளத்தில் வரிசையாக குறும்பதிவுகள் தோன்றுமோ அப்படி இந்த தளத்தில் வரிசையாக புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்.வரிசையாக புகைப்படங்கள் மட்டும் தான்,வேறேதும் இல்லை.

புகைப்படங்களை எல்லோர் பார்வைக்கும் வைக்கலாம்.உங்கள் குழுவுக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம்.புகைப்படங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது.

அமெரிக்கர் ஒருவர் தன்னைத்தானே படம் எடுத்து தினம் ஒரு படத்தை இணையத்தில் பதிவேற்றியதை உந்துதலாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

            http://www.bannka.com/   என்ற லின்கினூடாக இந்த தளத்திற்கு செல்லுங்கள்.

திங்கள், 18 ஜூன், 2012

ஒலிம்பிக் 2012 போட்டிகளை யூடியுபில் நேரடியாக(Live) காண

மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு சர்வேதேச ஒலிம்பிக் அமைப்பு (IOC) இந்தியா உட்பட 64 நாடுகளுக்கு யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்க இருக்கிறது.

ஆப்கானிஸ்தான், வங்காளம், புரூனே, பூட்டான், கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், லாவோஸ், மலேஷியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மங்கோலியா, மியான்மார், நேபால், பாக்கிஸ்தான், பப்புவா நியூகினி, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் ஒலிம்பிக் 2012 போட்டிகளை நேரடியாக காணலாம்.

இதற்க்காக யூடியுபில் The Olympics என்ற புதிய சேனல் ஓபன் செய்து இருக்கிறார்கள். இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியை அளிக்க இருக்கிறார்கள்.


இப்பொழுது இந்த சேனலில் கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீடியோக்கள் நிறைந்து உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியவுடன் லைவ் லிங்க் வீடியோ தெரியும்.


லிங்க் - 
www.youtube.com/olympic

Home Contact Me Ask Your Doubts About Me தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி ஆகும். இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இது போன்று பலரும் பல குரூப்பில் சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாளடைவில் நீங்கள் பேஸ்புக் இந்த குரூப்பில் அப்டேட்களை விரும்பாவிட்டாலும் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலகாதவரை அந்த குழுமத்தின் அப்டேட்ஸ் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோம் இந்த பிரச்சினையை நீக்க அந்த வேண்டாத பேஸ்புக் குழுமத்தில் இருந்து விலகுவது எப்படி என பார்க்கலாம்.



  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டாத பேஸ்புக் குரூப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் வலது பக்கத்தில் Settings பட்டனை அழுத்தினால் ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள Leave Group என்பதை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Leave Group என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள். இனி அந்த குழுமத்தின் எந்த அப்டேட்ஸ்ம் உங்களுக்கு வராது.
இனி அந்த குழுமத்தில் இருப்பவர்கள் உங்களை உறுப்பினராக சேர்க்க முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த குழுமத்தில் மறுபடியும் சேர்ந்து கொள்ளலாம்.

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள்: New Conversations View New Call View Better call quality Improved Video call quality Improved chat synchronization New presence and emoticon icons Store and view phone numbers in a Skype contacts profile. இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux 1 பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற Post Comment 5 comments: தமிழ்மகன்June 18, 2012 2:10 PM வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/future-of-computer-technology.html Reply gokulJune 18, 2012 2:23 PM பயனுள்ள தகவல். நன்றி சசி! Reply palani velJune 18, 2012 2:27 PM லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிட்டமைக்கு மைக்ரோசாப்ட்க்கு நன்றி. உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி! Reply வரலாற்று சுவடுகள்June 18, 2012 3:39 PM பகிர்வுக்கு மிக்க நன்றி சசி சார்.! Reply தமிழன் பக்கங்கள்June 18, 2012 9:23 PM பயனுள்ள தகவல். நன்றி Reply OLDER POST HOME Search Translate Powered by Translate கூகுள் பிளசில் இணைய வந்தேமாதரம் தொடர புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற Recent Posts லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு யூடியுப் தளத்தை புதிய தோற்றத்திற்கு மாற்ற தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி? ஜிமெயிலில் அனைத்து ஈமெயில்கள்களையும் ஒரே நிமிடத்தில் டெலீட் செய்ய ஒலிம்பிக் 2012 போட்டிகளை யூடியுபில் நேரடியாக(Live) காண Followers Popular Posts BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா? விண்டோஸ் 8 மென்பொருளை இலவச சீரியல் எண்ணுடன் டவுன்லோட் செய்ய


விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான வடிவில் டவுன்லோட் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்து அதை bootable பைலாக கன்வர்ட் பண்ணி தான் உபயோகிக்க முடியும்.

டவுன்லோட் செய்ய:

Windows 8 Release Preview in .exe format - Download

Windows 8 Release Preview in .iso - 32 bit - English- 3.3 GB - Download

Windows 8 Release Preview in .iso - 64 bit - English- 2.5 GB - Download

Product Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF

See Also: Minimum System Requirements to Install Windows 8 Release Preview

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு




நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


புதிய அம்சங்கள்:
  • New Conversations View
  • New Call View 
  • Better call quality 
  • Improved Video call quality 
  • Improved chat synchronization 
  • New presence and emoticon icons 
  • Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux

கணினியில் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க புதிய மென்பொருள்





சிலசமயம் மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது கணினி அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.அதாவது எதிர்பாரா
த விதமாக செயலிழந்து போகலாம், இமெயிலில் இருந்து ஏதாவது ஒன்றை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய் விடலாம்.இத்தகைய சோதனைகளால் காரணமே தெரியாமல் கணினி மீதே வெறுப்பு ஏற்பட்டுவிடும் .கணினி கில்லாடிகள் என்றால் உடனே எதாவது செய்து கணினியை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப் போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கணினிக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ என்ற பதட்டம் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.
அத‌ன் பிற‌கு பார்த்தால் சாதார‌ண‌ பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும். சின்ன‌ திருத்த‌திற்கு பிற‌கு ப‌ழைய‌ப‌டி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்துவிடும். ஆனால் ச‌ம‌ய‌ங்களில் கோளாறுக்கான‌ கார‌ண‌த்தை க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் கணினி கில்லாடிக‌ளே திண‌றிப்போய் விடுவார்க‌ள்.

     இப்ப‌டி கணினி ப‌ய‌னாளிக‌ளை விர‌க்தியில் ஆழ்த்தி வெறுப்படைய‌ வைக்கும் பிர‌ச்ச‌னைக‌ளில் இருந்து விடுவிப்ப‌த‌ற்காக‌வே இஸ்ரேல் நிறுவ‌ன‌ம் ஒன்று புதிய‌ மென்பொருளை அறிமுக‌ செய்துள்ள‌து. சொல்யூட்டோ என்னும் அந்த‌ மென்பொருள் கணினி சார்ந்த‌ விர‌க்திக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ வ‌ல்ல‌து என‌ வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகிற‌து.
சொல்யூட்டோ மென்பொருளை த‌ர‌விற‌க்க‌ம் செய்து கொண்டீர்க‌ள் என்றால் கணினி தொட‌ர்பான‌ க‌வ‌லைக‌ளை ம‌ற‌ந்து விட‌லாம்.அத‌ன் பிற‌கு உங்க‌ள் கணிக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த‌ மென்பொருள் ஒரு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னைப்போல‌ உங்க‌ள் ந‌ட‌வ‌டிக்கையை க‌ண்கானித்து கொண்டேயிருக்கும்.கணினியில் ஏதாவ‌து எதிர்பாராத பிர‌ச்ச‌னை அல்ல‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்ச‌னை என்றாலோ ஒரு ந‌ல்லாசிரிய‌னை போல‌ இந்த‌ மென்பொருளே அத‌ற்கான‌ தீர்வை சொல்லிவிடும்.

நீங்க‌ள் எந்த‌ க‌வ‌லையும் இல்லாம‌ல் கணினியில் ப‌ணியாற்ற‌லாம். பின்ன‌ணியில் க‌வ‌னித்துகொண்டிருக்கும் சொல்யூட்டோ வேக‌ம் குறைவ‌தையோ,செய‌லிழ‌ப்ப‌தையோ பார்த்துக்கொள்ளும்.

சொல்யூட்டோ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.க‌ண்கொத்தி பாம்பு போல‌வே சொல்யூட்டோ கணினி பயன்ப‌டுத்துப‌வ‌ரின் ஒவ்வொரு கிளிக்கையும் க‌வ‌னித்துக்கொண்டே இருக்கும்.ஏதாவ‌து சிக்க‌ல் என்றால் ச‌ட்டென்று க‌ண்டுபிடித்துவிடும்.உதார‌ண‌த்திற்கு திடிரென‌ மீண்டும் மீண்டும் கிளிக் செய்யப்ப‌டுகிற‌து என‌ வைத்துக்கொள்வோம்,எதிபார்த்த‌ ப‌ய‌ன் கிடைக்க‌வில்லை என‌ சொல்யூட்டொ ஊகித்து ,அதற்கான கார‌ணத்தை அறிந்து மாற்று ந‌ட‌வ‌டிக்கையை ப‌ரிந்துரைக்கும்.அது ம‌ட்டும் அல்ல‌ ஏதாவ‌து பிர‌ச்ச‌னை என்றால் அத‌னை சொல்யூட்டோவிட‌ம் தெரிவித்தால் அத‌ற்கும் தீர்வை ப‌ரிந்துரைக்கும்.
சிலச‌ம‌ய‌ங்க‌ளில் கணினியில் பிர‌ச்ச‌னை எற்ப‌டும் போது விடயம் அறிந்த‌ ப‌ய‌னாளி தானே அத‌னை சரி செய்து விட‌லாம். அல்ல‌து சாதாரண ப‌ய‌னாளியே கூட‌ சோத‌னை முறையில் எதையாவது செய்து பிரச்சனைக்கு தீர்வு காண‌லாம்.இவ‌ற்றை எல்லாம் சொல்யூட்டோ க‌வ‌னிக்கும்.அப்ப‌டியே விசுவாச‌ ஊழிய‌னை போல‌ நிறுவ‌ன‌த்தின் மைய‌ காப்பகத்திற்கு இந்த‌ குறிப்புக‌ளை அனுப்பி வைக்கும்.

இது உள‌வு வேலையாக‌ தோன்ற‌லாம்.ஆனால் இப்ப‌டி சேக‌ரிக்க‌ப்ப‌டும் த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் அடுத்த‌ முறை உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ரில் அதே போன்ற‌ பிர‌ச்ச்னை ஏற்பட்டால் அத‌ற்குண்டான‌ பொருத்த‌மான‌ தீர்வை சொல்யூட்டோ எடுத்துவிடும்.அந்த வ‌கையில் சொல்யூட்டோவின் புத்திசாலித்த‌ன‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரித்து கொண்டே போகக் கூடிய‌து.கி
ட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்ட‌ரை வ‌ருட ஆய்விற்கு பிற‌கு சொல்யூட்டோ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

புதிய மென்பொருள் பொருத்தினால் என்ன‌ ஆகும்,பாட‌ல் த‌ர‌விற‌க்க‌ம் செய்யும் போது என்ன‌ நடக்கும் ,திடிரென‌ வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் விழித்துகொண்டால் என்ன‌ ஆகும் என்றெலாம் இதற்கு அத்துப‌டி.அந்த‌ அடிப்படையில்பிரச்சனை ஏற்ப‌டும் போது பின்ன‌ணி குர‌ல் கொடுத்து காப்பாற்றும் .அதோடு ம‌ற்ற‌ கணினிகளில் கையாள‌ப்ப‌டும் வழிக‌ளையும் நினைவில் சேக‌ரித்து கொண்டு த‌ன‌து அறிவை ப‌ட்டை தீட்டிக்கொண்டே இருக்கும்.

கணினி சார்ந்த விரக்திக்கு எதிரான‌ மென்பொருள் என்னும் அடைமொழியோடு அறிமுக‌மாகியுள்ள‌ சொல்யூட்டோவை இல‌வ‌ச‌மாக‌ ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ள‌லாம்.கட்டணம் செலுத்தினால் பிரச்சனைக் கால‌த்தில் அதுவே தீர்வுக‌ளையும் செய‌ல்ப‌டுத்திவிடும்.

அருமையான் மென்பொருள்தான் .ஆனால் ஒரு உளவாளியை போல‌ நம‌து கணினிக்குள் அனும‌திக்க‌ வேண்டிய‌து ப‌ற்றியும்,அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் குறித்தும் சேமித்து கொள்வ‌தால் கொஞ்ச‌ம் ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.

ஆனால் கணினியின் பொதுவான‌ செய‌ல்பாடுக‌ள் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ம‌ட்டுமே சேகரிக்கப்படுகிறதே த‌விர‌ ப‌ய‌னாளியின் த‌னிப்ப‌ட்ட‌ விவ‌ர‌ங்க‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என‌ சொல்யூட்டோ நிர்வாக‌ம் உறுதி அளிக்கிற‌து.

http://www.soluto.com/என்ற லிங்கினூடாக சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்
 

ஞாயிறு, 17 ஜூன், 2012

உங்களின் அன்றாட நிகழ்வுகளை நினைவுபடுத்துவதற்கான தளம்


                இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறதுஇந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது.
இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணைய தளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் இந்த 2ரிமைண்டர்ஸ் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம்.
       ஆனால் 2ரிமைண்டர்ஸ் தளத்தை பிறந்த நாள் நினைவூட்டல் தளத்திற்கும் மேலானது என்றே சொல்ல வேண்டும்.உண்மையில் உங்கள் வாழ்க்கையை அழகாக நிர்வகித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
இதனை பிறந்த நாளை மறக்காமல் இருக்க உதவுவதில் இருந்து துவங்குகிறது.
அதற்காக நீங்கள் செய்ய வேன்டியதெல்லாம் இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு உங்களது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்க வேண்டும்.அதன்பிறகு இந்த தளத்தையே கூட நீங்கள் மற‌ந்துவிடலாம்.
ஆனால் உங்கள் நண்பர்களின் பிறந்த நாள் வருவதற்கு முன் இந்த தளம் மறக்காமல் இமெயில் மூலம் நினவூட்டலை அனுப்பி வைக்கும்.சரியாக ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த நினவூட்டல் வந்து விடும்.தொடர்ந்து பிறந்த நாளுக்கு முந்தைய தினமும் நினைவூட்டல் வரும்.
    எப்பொழுது நினைவூட்ட வேண்டும் என்பதை கட்டுப்படுத்திக் கொள்ளும் வசதியும் உண்டு.இமெயில் தவிர செல்போனில் எஸ் எம் எஸ் வாயிலாகவும் நினைவூட்டலை பெறலாம்.
      எனவே,பிறந்த நாளுக்கு ரீட் த‌ரும் நண்பனிடம் இன்று உனக்கு பிறந்த நாளா சொல்லவேயில்லை என்றெல்லாம் அசடுவழிய தேவையிருக்காது.  நினைவூட்டுவதோடு நின்று விடாமல் பிறந்த நாளுக்கு அனுப்பக்கூடிய வாழ்த்து அட்டைகளையும் இந்ததளம் பரிந்துரைக்கிறது.அப்படியே பரிசு பொருட்களுக்கான ஐடியாக்களையும் முன் வைக்கிறது. பரிசு பொருளோ வாழ்த்து அட்டையோ வாங்க நேரம் இல்லை என்றால் இந்த தளத்தின் மூலமாகவே வாழ்த்து சொல்லி விடலாம்.
பிறந்த நாளுக்கு என்றில்லை,திருமண நாள் உள்ளிட்ட எந்த முக்கியமான நிகழ்வுகளுக்கு வேண்டுமானாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.நம் ஊர்க்காரர்கள் கிருத்திகை,பிரதோஷம் போன்ற தினங்களை மறக்காமல் இருக்க கூட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இவ்வளவு ஏன் தொலைபேசி பில் கட்ட வேண்டிய நாள்,கேஸ் புக் செய்ய வேண்டிய தினம்,வங்கியில் லோனுக்கான தவணை செலுத்த வேண்டிய தேதி போன்றவற்றை கூட இந்த தளத்தில் குறித்து வைத்து சரியான நேரத்தின் நினைவூட்ட வைக்கலாம்.
நம‌க்கு நாமே திட்டம் போல கட்டாயம் இதனை செய்ய வேண்டும் என்று சில விஷயங்களை நினத்து கொண்டிருப்போம் அல்லவா அந்த வேலைகளை மறக்காமல் செய்து முடிக்கவும் இந்த சேவை கை கொடுக்கும்.அந்த வகையில் ஒருவருடைய வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு முக்கிய விஷயங்க‌ளை மறக்காமல் இருக்க இந்த தளம் உதவுகிறது.
இந்த சேவையை எந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்துவது என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது.
  மருத்துவரிடம் செக் அப்பிற்கு சென்று கொண்டிருபவர்கள் அடுத்த முறை எப்போது டொக்டரை பார்க்க வேண்டும் என்பதையும் இந்த தளத்திடமே சொல்லி வைத்து நினைவுட்ட சொல்லலாம்.இப்படியே மனைவி வாங்கி வரச் சொல்லிய பொருளை மறக்காமல் இருக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
சில நேர‌ங்களில் உறவினரை விமானநிலையத்தில் இருந்து பிக் அப் செய்வதாக‌ சொல்லிவிட்டு வேலை அதற்கான நேரம் வந்ததும் மறந்து விட்டு அவரை அம்போவென தவிக்க விட்டு விடுவீர்கள் அல்லவா?அத்தகைய தவறுகள் நேராமல் இருக்கவும்,இந்த சேவையின் மூலமே எப்போது விமானநிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றும் நினைவில் வைத்து கொள்ளலாம்.
இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு குழுவாக செய்ய திட்டமிட்டுள்ள பணியை கூட இந்த தளத்தின் வசம் ஒப்படைத்து விடலாம். உதாரணத்திற்கு நண்பர்கள் ஒன்றாக மதிய உணவுக்கோ பிக்னிக்கிற்கோ செல்ல விரும்பும் பட்சத்தில் தனிதனியே போன செய்து அல்லது இமெயிலனுப்பி கொண்டிருக்கவேண்டியதில்லை. இத்தளம் நண்பர்களின் முகவரியை கொடுத்து மனதில் உள்ள திட்டத்தையும் சொன்னால் அவர்களுக்கு தகவல் தரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிற‌து.
      இப்படி ஒரு தற்காலிக சமூக வலைப்பின்னல் சேவையாகவும் செயல்ப்படுவதாக இந்த தளம் பெருமைப்பட்டு கொள்கிற‌து.
உங்கள் வாழ்க்கையை சிறந்த‌ முறையில் திட்டமிடப்பட்டதாகவும் சுவை மிக்கதாகவும் மாற்றிய‌மைத்து கொள்ள வழி செய்வதாகவும் இந்த தளம் சொல்கிறது.திட்டமிட உதவும் இணைய நாட்காட்டிகளை விட இந்த முறை சிறந்தது என்றும் இந்த தளம் உறுதியாக சொல்கிறது.
இன்டர்நெட் துறையில் அனுபவம் மிக்க மார்க் லூக்கி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகிறார்.பஸ்மைண்டர் என்னும் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்த தளத்தை அவர் நடத்தி வருகிறார்.நினைவூட்டல் சார்ந்த மேலும் பல சேவைகளை வழங்க‌ இந்த தளம் திட்டமிட்டுள்ளது.நீங்களும் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள் http://www.2reminders.com  

ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டுமா ?





ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தும் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கம் இருந்தால் கவலையே வேண்டாம். ஆங்கிலத்தில் ரைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. aitype என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக ரைப் செய்ய உதவுகிறது.

அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் ரைப் செய்ய உதவும் நோட்பாட் அல்லது வேர்பாட் போலதான். ஆனால் இதில் ரைப் செய்யத் துவங்கும் போதுதான் இதன் மகத்துவமே தெரியும். ரைப் செய்பவர்கள் முழுவதும் ரைப் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் ரைப் செய்யத் துவங்கும் போதே அந்த சொல் என்னவாக இருக்கும் என்று காட்டப்பட்டு விடுகிறது. சரியான சொல் என்னும் பட்சத்தில் அதனை கிளிக் செய்தாலே போதும். கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடலுக்கான சொல்லை ரைப் செய்ய முற்படும் போதே இந்த சொல் தானா என்று பரிந்துரைக்கப்படுகிறது அல்லவா? அதே போல இந்த ரைபிங் சேவையும் முன்கூட்டியே வார்த்தைகளை பரிந்துரைக்கிறது. வார்த்தைகள் மட்டுமல்ல, பல நேரங்களில் முழு சொற்றொடரையுமே பரிந்துரைக்கிறது.

உதாரணத்திற்கு கடிதம் எழுதுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். மதிப்பிற்குரிய அம்மணி என்று துவங்கியதுமே கடிதத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு முழு சொற்றொடரும் திரையில் தோன்றும். இதன் காரணமாக நாம் நினைத்ததைவிட வேகமாக ரைப் செய்து விடலாம். அதை விட முக்கியமாக இலக்கண பிழையின்றி ரைப் செய்யலாம்.

வாசகங்களாகவே பரிந்துரைக்கப்படுவதால் சரியான வரியை தேர்வு செய்து கொண்டாலே போதும். அதே போல வார்த்தைகளை பிழையின்றியும் தேர்வு செய்து கொள்ளலாம். ரைப் செய்து முடித்த பின் பிழைத் திருத்தியை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடிக்கும் போதே சரியானதாக தானே தேர்வாகிறது. எழுத்து பிழையும் இல்லை, இலக்கணப் பிழையும் இல்லை என்ற நம்பிக்கையோடு சொல்ல வந்த விஷயத்தில் கவனம் செலுத்தலாம். அதே போல ஏதாவது சொல்லில் சந்தேகம் இருந்தாலும் அதனை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டுமா ரைப் செய்பவரின் தேவை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப முதலிலேயே பல்வேறு அம்சங்களை நிர்ணயித்து கொள்ள முடியும். எழுத்து நடையையும் கூட தேர்வு செய்வது சாத்தியம். அலுவல் நிமித்தமான நடையா, சட்ட ரீதியான மொழியா, இளமை துள்ளலான வார்த்தைகளா என்றெல்லாம் கூட தீர்மானிக்க முடிவது உண்மையிலேயே சிறந்தது. எல்லாவற்றையும் விட முக்கியமாக எழுதும் போது எந்த விதத்திலும் குறிக்கீடாக அமையாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவு என்று சொல்லப்படும் அர்டிபிஷியல் இன்டலிஜனஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையானது எழுதப்படும் விஷயத்தின் அர்த்தத்தை உணர்ந்து வார்த்தைகள் மற்றும் வாசகங்களை பரிந்துரைப்பதால் இதனை பயன்படுத்தும் போது புதிய சொற்களை கற்றுக் கொண்டு ஒருவரின் சொற் வங்கியை வளமாக்கி கொள்வதும் சாத்தியமே. ஆங்கிலத்தில் அதிக பரிட்சயம் இல்லாமல் அடிப்படை விஷயம் மற்றும் அறிந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்து மூலமாக தொடர்பு கொள்ள இந்த சேவை மிகவும் உதவும்.

இந்த சேவையை அவுட்லுக் இமெயில் மற்றும் நோட்பாட், வேர்பாட்டிலும் இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் மொழிபெயர்ப்பு வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு. ரைப் செய்யப்பட்ட வரிகளை தாய்மொழியில் மாற்றிக் கொண்டு பொருளும் நடையும் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம். இப்போதைக்கு 13 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளது. ரைப் செய்வது இதை விட சுலபமாக இருக்க முடியாது என்று ஏ ஐ ரைப் சொல்லிக் கொள்வது உண்மைதான் என்பது இதனை பயன்படுத்தி பார்த்தால் புரியும்.

http://www.aitype.com/என்ற இணையத்தளத்திற்கு சென்று ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள் 

கணினியிலிருந்து எமது தடயங்களை அழிப்பது எப்படி?




இன்றைய கணினி மயமான உலகிலே நாம் எமது கணினியில் மட்டுமல்ல, வேறொருவரின் கணினியிலோ அல்லது பொதுக் கணினியிலோ பணி செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் போது மின்னஞ்சல் அனுப்புதல், Credit card மூலம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது போன்ற பல தனிப்பட்ட, இரகசிய வேலைகளை செய்ய வேண்டி யிருக்கும். இவ்வாறு நாம் பாவித்து முடித்த பின்னர் இக்கணினியைப் பாவிப்பவர்கள் எமது தனிப்பட்ட விபரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.
இதற்காக I.Evidence finder போன்ற பல Softwareகள் உள்ளன. நாம் cache, history, cookies, போன்றவற்றை அழித்தாலும்கூட எமது கடவுச்சொற்கள், chat history, முக்கிய தரவுகள் திருடுபோக வாய்ப்புள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வாக எமது தடயங்களை அழிக்க CleanAfterMe எனும் இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இது ஒரு மிகச்சிறிய மென்பொருள், பயன்படுத்துவதும் சுலபமானது. இது ஒரு portable Software என்பதால் கணினியில் நிறுவவேண்டிய அவசியமில்லை. Pendriveஇல் எடுத்துச் சென்று பயன்படுத்தமுடியும்.

இதனைத் தரவிறக்கி cleanafterme.exe என்ற fileஐ run செய்யவும்.


பின்னர் நீக்கவேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து clean selected items என்றbutton ஐ click செய்வதன் மூலம் உங்கள் தடயங்களை அழிக்கலாம்.

Advanced option இற்குச் சென்று Fill the file with zero bytes, and then deleteஎன்பதற்கு மாற்றி அழிப்பதன் மூலம் எந்தவொரு Recovery softwareஐக் கொண்டும் மறுபடியும் மீட்டெடுக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப நிபுணர் பதவி விலகப் போவதாக அறிவிப்பு


பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தலைமை தொழிநுட்ப நிபுணர் பிரெட் டெய்லர், இன்னும் சில நாட்களில் தான் பதவி விலகப் போவதாகவும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நாஸ்டாக் ஸ்டொக் மார்க்கட்டில் பேஸ்புக்கின் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது கடந்த மாதம் ஃபேஸ்புக்கின் பங்குகள் $38 டொலரிலிருந்து 21% வீதம் வீழ்ச்சியடைந்து $30 டொலருக்கு விற்பனையாகத் தொடங்கின.
Mr.டெய்லர் தனது பதவி விலகல் தொடர்பாக கூறுகையில், பேஸ்புக்கிலிருந்து விலகுவது தனக்கு கவலை அளிப்பதாக இருந்த போதும் புதிதாக நிறுவனம் ஆரம்பிப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது என்றார்.
மேலும் இந்த பதவி விலகல் மிக இலகுவான காரியமாகத் தனக்கு அமையவில்லை என்றும், பேஸ்புக்கின் தலைமைத்துவம் மற்றும் குழு மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.
இது தவிர பேஸ்புக்கில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளான பேஸ்புக் கமெரா, மற்றும் அப்பிள் நிறுவனத்திற்கான வசதிகள் என்பன குறித்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேஸ்புக்கின் ஸ்தாபகரான மார்க் சூக்கெர்பேர்க் டெய்லரின் பதவி விலகல் குறித்து கருத்துரைக்கையில், அவருடன் வேலை செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக இருந்தது எனவும், அவரும் அவரது குழுவினரும் பேஸ்புக்கிற்கு ஆற்றிய கடமை தொடர்பாக தனக்கு மிகுந்த விசுவாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

AVI ReComp மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்வதற்கு


வீடியோக் கோப்பு வகைகளுள் ஒன்றான AVI இனை வேறு கோப்பு வடிவங்களுக்கு மாற்றுவதற்கும் அவற்றின் தரம், அளவு என்பனவற்றை மாற்றுவதற்கும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் AVI ReComp மென்பொருளானது முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதுடன் மிகுந்த வினைத்திறனான மென்பொருளாகவும் காணப்படுகின்றது. அதாவது வீடியோ ஒன்றின் அளவினை அதன் தரம் குறைவடையாது மாற்றவல்லது.
மேலும் 28.6MB அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் ஒரே நேரத்தில் பல AVI கோப்புக்களை பயன்படுத்தி அவற்றின் அளவு, கோப்பு மாற்றம் என்பவற்றை செயற்படுத்த முடியும்.
இதன் மூலம் AVI வீடியோக் கோப்பினை mp3, wav, ac3, dts, ogg ஆகிய ஓடியோ கோப்புக்களாகவும் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 16 ஜூன், 2012

தடை செய்யப்பட்ட இணையதளத்தை பார்வையிடுவதற்கு


முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்ப்பதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
அன் டைனி என்கின்ற தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.
டுவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்கின்றனர்.
சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.
இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.

வெள்ளி, 15 ஜூன், 2012

FORMAT செய்வதற்க்கு Driver CD தடையாய் இருக்கின்றதா?

வாழ்த்துச் செய்தியை அனிமேஷனில் சொல்ல வேண்டுமா

உங்கள் கணினியை சுத்தமாக்க ஓர் மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை அனைத்துவகை வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரு தளம்

இனிமேல் பேஸ்புக்கின் மூலம் வருமானம் ஈட்டலாம்

கூகுள் குரோமில் புதிய வசதி அறிமுகம்

குடிநீரின் Ph இனை மாற்றக் கூடி​ய தொடுதிரை வசதி கொண்ட சாதனம்

ஞாயிறு, 10 ஜூன், 2012

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்

வெள்ளி, 1 ஜூன், 2012

வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க

வியாழன், 31 மே, 2012

மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது இரகசிய தகவல்களை பாதுகாக்க

வியாழன், 24 மே, 2012

செவ்வாய், 22 மே, 2012

ஞாயிறு, 20 மே, 2012

சனி, 19 மே, 2012





புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம்

செவ்வாய், 8 மே, 2012

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com