சனி, 29 அக்டோபர், 2011


இலக்கை நிர்ணயிக்க உதவும் இணையம்
[ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 11:18.41 மு.ப GMT ]
இலக்குகளை நிர்ணயிப்பது ஒரு பெரிய கலை தான். ஆரம்பத்தில் இலக்குகளை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதைவிட செயல்படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதிலும் பல நேரங்களில் முடியாமல் இருக்கலாம்.
வாழ்க்கையின் இலக்குகளை எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் எப்படி அமைக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறது ஒரு தளம்.
இலக்கு உள்ள மனிதன் எதை நினைத்தாலும் அதை எளிதாக அடைவான். பலருக்கு இலக்கை நிர்ணயிப்பதில் உள்ள கடினத்தை களைவதற்காக உதவி செய்ய ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளவும் அடுத்து நாம் எளிதாக இலக்குகளை உருவாக்க ஆரம்பிக்கலாம், நாளை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில் தொடங்கி அடுத்த மாதத்திற்குள் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெளிவாக பட்டியலிட்டு காட்டுகிறது.
ஒவ்வொரு இலக்கையும் வகைவாரியாக திகதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு இலக்குக்கும் நாம் செய்த முயற்சி என்ன தற்போது வரை என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று அத்தனையும் குறித்து வைக்கலாம், இலக்கை அடையும் வரை உங்களை விடாமல் துரத்தும் இந்தத்தளம் வாழ்க்கையில் நாம் எளிதாக வெற்றி பெற உதவும்.

இலக்கை நிர்ணயிக்க உதவும் இணையம்

இலக்குகளை நிர்ணயிப்பது ஒரு பெரிய கலை தான். ஆரம்பத்தில் இலக்குகளை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதைவிட செயல்படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதிலும் பல நேரங்களில் முடியாமல் இருக்கலாம்.
வாழ்க்கையின் இலக்குகளை எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் எப்படி அமைக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறது ஒரு தளம்.
இலக்கு உள்ள மனிதன் எதை நினைத்தாலும் அதை எளிதாக அடைவான். பலருக்கு இலக்கை நிர்ணயிப்பதில் உள்ள கடினத்தை களைவதற்காக உதவி செய்ய ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளவும் அடுத்து நாம் எளிதாக இலக்குகளை உருவாக்க ஆரம்பிக்கலாம், நாளை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில் தொடங்கி அடுத்த மாதத்திற்குள் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெளிவாக பட்டியலிட்டு காட்டுகிறது.
ஒவ்வொரு இலக்கையும் வகைவாரியாக திகதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு இலக்குக்கும் நாம் செய்த முயற்சி என்ன தற்போது வரை என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று அத்தனையும் குறித்து வைக்கலாம், இலக்கை அடையும் வரை உங்களை விடாமல் துரத்தும் இந்தத்தளம் வாழ்க்கையில் நாம் எளிதாக வெற்றி பெற உதவும்.

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர; ]
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்
அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.
பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.

யு.எஸ்.பி ட்ரைவின் மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் ]
உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம்.
சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.
நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும்.
இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.
இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.
ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.
தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.

உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்பதற்கு
[ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 04:57.59 மு.ப GMT ]
ஒரு மொழியில் நாம் கொண்டிருக்கின்ற புலமை அம்மொழியின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது.
மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக்கள் நமக்கு உதவுகின்றன.
அந்த வகையில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில் நாம் கொண்டுள்ள திறமையினை சோதனை செய்து கொள்ள இணைய தளம் ஒன்று இயங்குகிறது.
இதன் பெயர் Knoword. சொல் சோதனை மட்டுமின்றி அதனைச் சரியான எழுத்துக்களில் அமைக்கிறோமா என்பதனையும் இது நம்மிடம் எதிர்பார்க்கிறது. இந்த விளையாட்டு தரப்படும் இணைய தள முகவரிhttp://www.knoword.org/home.php.
இந்த தளத்தில் நுழைந்தவுடன் இதில் நம் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களுடன், இதற்கென பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லினை அமைக்க வேண்டும்.
பின்னர் இதில் லொகின் செய்து விளையாடலாம். சொல் ஒன்றுக்கான விளக்கம் அளிக்கப்பட்டு முதல் எழுத்து மட்டும் தரப்படும். நீண்ட கட்டத்தில் அந்த சொல்லை டைப் செய்திட வேண்டும்.
சரியாக டைப் செய்துவிட்டால் அடுத்த சொல் தரப்படும். சொல் தெரியாவிட்டால் அதனை ஸ்கிப் செய்திடலாம். அடுத்த சொல்லுக்கான எழுத்தும் விளக்கமும் தரப்படும்.
சொற்களை அறிந்து வைத்தல் மட்டுமின்றி விரைவாகச் சிந்தித்து ஒரு சொல் எது என அறிவதும் முக்கியமாகிறது. சரியான எழுத்துக்களை டைப் செய்திடும் திறனும் வேண்டும்.
சொற்களைச் சரியாக டைப் செய்து கொண்டே சென்றால் அடுத்தடுத்து சொற்கள் கிடைக்கும். முதலில் ஒரு நிமிடம் தரப்படுகிறது. பின்னர் இது தொடர்கிறது.
ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிகிறீர்கள் என்பதே இந்த கேம். பலர் சொற்களைக் கண்டறிவார்கள், ஆனால் எழுத்துக்கள் சரியாக அமைக்க முடியாமல், தவறுகளை ஏற்படுத்துவார்கள். உங்களின் சொல் சரியாக அறியும் திறன், வேகம் ஆகியவை கணக்கிடப் படுகின்றன.
முடியாதபோது நீங்கள் எத்தனை சொற்கள் சரியாக அமைத்தீர்கள் என்ற முடிவு காட்டப்படும். உங்கள் கணக்கில் இது பதிவு செய்யப்படும். அதிகச் சொற்களைக் கண்டறிந்தவர்கள் பட்டியலையும் பார்க்கலாம். உங்கள் ரேங்க் என்ன என்பதனையும் கண்டறியலாம்.
நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிந்தாலும், நீங்களும் இந்த பட்டியலில் இணைத்துக் காட்டப்படுவீர்கள். இதுவரை இந்த தளத்தில் விளையாடப்பட்ட கேம்ஸ் எண்ணிக்கை பத்து லட்சத்தினைத் தாண்டிவிட்டது.
ஒவ்வொரு நாளும் எத்தனை கேம்ஸ் விளையாடப்பட்டது, எத்தனை சொற்கள் சரியாகக் காணப்பட்டன, புதியதாக எத்தனை உறுப்பினர்கள் பதிவு செய்தனர் என்ற தகவல்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு காட்டப்படுகின்றன.

Problem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேமித்து வைப்பதற்கு
[ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 04:48.19 மு.ப GMT ]
உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணணிகளில் அதிகமாக பயன்படுத்தகூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான்.
அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பை வெளியிட்டது.
இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது.
விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணணியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கணணி சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ளலாம்.
இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும் பதித்து(SCREEN SHOT) வைக்கிறது. அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது.
இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்தீர்கள் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.
இதனை திறப்பதற்கு START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள் அதில் PSR என தட்டச்சு செய்யுங்கள் அல்லது START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டச்சு செய்யுங்கள்.
இதனை பயன்படுத்த முதலில் அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பின்னர் வரும் விண்டோவில் START RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள். பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனை திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும்போதும் இந்த மென்பொருள் ஸ்க்ரீன் SNAP SHOT எடுத்து வைக்கும். முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள்.
பின்னர் அது கோப்பை எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும் அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும். அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப்பட்டிருக்கும்.

வியாழன், 27 அக்டோபர், 2011


இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:32.44 மு.ப GMT ]
கணணி பாதுகாப்பில் ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. அனேகமானவை பணம் கொடுத்து வாங்குபவையே.
அப்படி பணம் கொடுத்து வாங்கி பாவிக்க மனமில்லாதவர்கள் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களில் சிறந்ததை தேடிப்பிடிப்பது மிகவும் கடினமானது. இப்படி இலவசமாக வரும் மென்பொருட்களில் பல பயனற்றவை.
இவற்றில் சிறந்த மென்பொருட்களை ஒரு தளம் தரப்படுத்தி தருகிறது. இங்கு அனைத்து விதமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களையும் தரவிறக்கி கொள்ளலாம்.
ஆண்டிவைரஸ் மாத்திரமின்றி கணணி பாதுகாப்பிற்கு முக்கியமான அனைத்து மென்பொருட்களும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி ஆண்டிவைரஸ் மென்பொருட்களுக்கான புதுப்பித்தல்கள், கட்டண ஆண்டிவைரஸ் மென்பொருளின் பரீட்சார்த்த பதிப்பு போன்றவற்றையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 07:30.16 மு.ப GMT ]
ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.
என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.
இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.
நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.
எப்படி என்றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.
Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.

Adobe PageMaker 7.0 Pro தரவிறக்கம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:36.50 மு.ப GMT ]
இது அடோப் நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் பலர் இதனை விடவில்லை. ஏனென்றால் இவ் மென்பொருளில் இருக்கும் இலகுத்தன்மையே இதற்கு காரணம்.
தற்பொழுது புதிய பதிப்பாக Adobe Indesign CS5 கூட வந்து விட்டது. இது பல மேலதிகமான தொழிற்பாடுகளுடன் கூடியது.
ஆனால் புதிய பதிப்பை பாவிப்பதற்கென கணணி கூடிய தகமைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவ் 7.0 பதிப்பிற்கு கீழ்வரும் தகமைகள் இருந்தாலே போதுமானதாகும்.
1. Intel ® Pentium ® processor.
2. Microsoft ® Windows NT ® 4.0 with Service Pack 6, Windows ® 2000 Professional with Service Pack 2, Windows XP.
3. Professional or Home Edition.
4. 32MB of available RAM (48MB or more recommended).
5. 175MB of available hard-disk space for installation (200MB or more recommended).
6. Video card with 800×600 resolution and 8-bit/256 colors (24-bit, high-resolution display recommended).
7. For Adobe ® PostScript ® printers: Adobe PostScript Level 2 or later
இதனை பணம் கொடுத்து வாங்கவேண்டிய தேவை இருக்காது. இணைய இணைப்பு இருந்தால் போதும் கீழ் உள்ள Link ஐ பதிவிறக்கி இலவசமாக பயன்படுத்துங்கள்.

புதன், 26 அக்டோபர், 2011


மிக எளிதாக கணித அடிப்படையை அறிந்து கொள்வதற்கு
கணித அடிப்படையே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் கூகிள் எர்த்(Google Earth) மூலம் கணித அடிப்படையை புரியும் விதத்தில் சொல்ல ஒரு தளம் உள்ளது.
சாதாரண அடிப்படை கணித கேள்விகளுக்கு கூட கூகிள் எர்த்-ல் தெளிவாக அதுவும் வீடியோவுடன் பதில் சொல்லுவது கணிதம் பற்றியே அடிப்படை அறிவு இல்லாதவருக்கும் கணித அறிவை கொடுப்பதாக இருக்கிறது.
கூகிள் எர்த்-ஐ நாம் எப்படி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தளத்திற்கு சென்ற பின் தான் தெரிகிறது என்று சொல்லும் அளவிற்கு, கூகிள் எர்த் வழங்கும் அத்தனை விதமான சேவைகளையும் துல்லியமாக பட்டியலிடுகிறது.
கணிதம் என்றால் கசக்கும் மாணவர்களுக்கு கணிதம் மேல் ஒரு தனிப்பிரியம் வைத்துவிடுகிறது, கூகிள் எர்த் அதுவும் முப்பரிமானத்தில் அல்ஜீப்ரா முதல் அனைத்து விதமான கணித அடிப்படையும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறது.
இத்தளத்திற்கு சென்று ஆரம்ப டூட்டோரியல் முதல் பாடங்கள் வரை தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு எது வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாக கூகிள் எர்த்-ல் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதற்கு கூகிள் எர்த் மென்பொருள் நம் கணணியில் நிறுவியிருக்க வேண்டும்.

ரோல்டொப் கணணிகள் விரைவில் அறிமுகம்
[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 04:52.50 மு.ப GMT ]
தற்போது பாவனையில் இருக்கும் மடிக்கணணிக்கு பதிலீடாக எதிர் காலத்தில் மிகவும் திறன் வாய்ந்த ரோல்டொப் கணணிகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது எதிர்கால சந்ததியினருக்கு வாய்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோல் டொப் கணணிகள் மிகவும் துல்லியமாக கிராபிக்ஸ் வடிவில் காட்டப்பட்டுள்ளதை கீழுள்ள வீடியோ மூலம் காணலாம்.

செவ்வாய், 25 அக்டோபர், 2011


4ஜி கைத்தொலைபேசிகள் அறிமுகம்
உலக அளவில் கைபேசிகளை தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
காலக்ஸி எஸ்2 எல்.டி.இ, காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ என அழைக்கப்படும் இவை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில்நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் தகவல்களைப் பரிமாறும் திறன் கொண்டவை.
எஸ்2 எல்.டி.இ ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது.
இதில் இயங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ப்ராசசர் ஆகும். எச்.டி. எல்.டி.இ. மொபைல்போனின் திரை 4.65 அங்குல அகலம் உடையது.
இந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அமோலெட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும்.
180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது.
4ஜி எல்.டி.இ தொழில்நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல்பாட்டினைப் பெறுவதுடன் அதிக ரெசல்யூசனுடன் கூடிய வயர்லெஸ் சேவையும் கிடைக்கும்.
சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளியானது முதல் பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு
உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.
இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.
Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி
உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள்.
அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 20 அக்டோபர், 2011


பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்
[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 08:00.19 மு.ப GMT ]
பயர்பொக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட்டுள்ளது.
இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.
மொஸில்லா தளத்தில் தரப்படுத்தப்பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரவுசர் இயக்கத்தினைத் தொடங்குகையில் நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும்.
இதனால் பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில் அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.
இணைய தளம் உருவாக்குபவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
இனி புதிய பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன் அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும்.
பின்னர் அதன் சோதனை பதிப்பு(Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு
[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 07:54.55 மு.ப GMT ]
உலகளவில் சில பிரபலமான நபர்களின் பிறந்த நாள் மற்றும் சில முக்கியமான நாட்களில் அந்த அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கூகுள் தனது லோகோவை மாற்றி அமைக்கும்.
இந்த சேவையானது Google Doodles  என்று அழைக்கப்படுகிறது. இந்த Google Doodles சேவையை 1998 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வருகிறது.
அறிஞர்களை தனது லோகோ மூலம் கவுரவிக்கிறது. இப்படி உருவாக்கப்படும் Google Doodles வாசகர்களை ரசிக்கவும் வைக்கிறது. ஒரு சில லோகோ அனைவரின் மனதையும் கவரும் அனைவரும் இந்த லோகோவே தொடர்ந்து இருக்காதா என நினைப்பார்கள்.
ஆனால் மறுநாளே அந்த லோகோ மறைந்து பழைய படி Google லோகோ வந்திருக்கும். இப்பொழுது கூகுள் வாசகர்களுக்கு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. நீங்கள் நினைக்கும் Google Doodle உங்கள் தேப்பல்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.
இதற்கு எந்த நீட்சியையும் நிருவ வேண்டியதில்லை, எந்த மென்பொருளும் தேவையில்லை. இந்த Google Doodles  லிங்கில் செல்லுங்கள் அங்கு கூகுள் இதுவரை வெளியிட்ட அனைத்து Google doodles வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் உங்களுக்கு பிடித்த google doodle அருகில் உள்ள Make this my favorite doodle என்ற பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த கணம் அந்த google Doodle உங்களின் கூகுள் டிபால்ட் கூகுள் லோகோவாக மாறிவிடும்.
இந்த தளத்தில் அனைத்து நாடுகளின் google Doodles இருக்கும். இதில் உங்களுக்கு எது பிடித்து உள்ளதோ அதை உங்களின் கூகுள் டீபால்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.

திங்கள், 17 அக்டோபர், 2011


இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண


இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.

Districts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 


இதில் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இருக்கும் இதில் உங்களுக்கு விரும்பிய மாநிலத்தை கிளிக் செய்தால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் வரும். 


அந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டிய மாவட்டத்தின் லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களை அந்த மாவட்டத்தின் தளத்திற்கு அழைத்து செல்லும். அதில் நீங்கள் அந்த மாவட்டத்தின் அரசாங்க அறிவுப்புகளை பார்த்து கொள்ளலாம். மட்டும் அரசு படிவங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் குறைகளையும் அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.

தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் அரியலூர் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டத்திற்கும் தனி இணையதளம் உள்ளது.

10 ஆம் வகுப்பிற்குள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் அவர்களுக்கு அறிய தாருங்கள். 


கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு இந்த தகவல் அனைவரையும் சென்றடைய உதவுங்கள். 



இணையத்தை பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 04:49.07 மு.ப GMT ]
இணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். 
1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் லாக் அவுட் செய்யுங்கள். அத்துடன் கணணியை ஷெட்டவுண் செய்ய வேண்டும்.
2. Set a safe password: எப்போதும் பாதுகாப்பான கடவுச்சொற்களை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை கடவுச்சொற்களாக மாற்றிக்கொள்ளலாம்.
3. How to recognise: மின்னஞ்சலில் வரும் இணைப்புக்களை அழுத்தும் முன் மவுஸை குறிப்பிட்ட இணைப்புக்கு மேலே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான இணைய முகவரியை(URL) பாருங்கள்.
4. Use a safe browser: பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துங்கள். பயர்பொக்ஸ் அல்லது குரோம் உலாவியை பயன்படுத்தவதே எப்போதும் சிறந்தது.

கணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 04:43.01 மு.ப GMT ]
விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில் தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
அண்மையில் இந்த சிஸ்டத்தில் எப்படி கணணி ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக மெமரி கம்பைனிங்(memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில் ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும் போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து ஒரே அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து அத்தனை முறை மெமரியைப் பயன்படுத்தி இருந்தால் அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் மெமரி கிடைக்கும்.
விண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன.
சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது.
எடுத்துக்காட்டாக சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது.
இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக்கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால் 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கணணிகளில், ராம் மெமரி தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு கணணி இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது.
ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்.பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில் விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால் அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது

ஞாயிறு, 9 அக்டோபர், 2011


இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய



இணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்
[ திங்கட்கிழமை, 10 ஒக்ரோபர் 2011, 04:42.21 மு.ப GMT ]
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் அனைவரும் புரியும் வண்ணம் பட்டியலிடுகிறது ஒரு தளம்.
124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com