வியாழன், 17 நவம்பர், 2011

Posted on 11:31 PM by piragasart


கோப்புகளை படங்களாக மாற்றம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 03:53.18 மு.ப GMT ]
நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட் கோப்புகளான வேர்டு(Word) , எக்சல்(Excel )மற்றும் பவர்பாயிண்ட்(Power Point ) போன்ற கோப்புகளை Jpg படங்களாக மாற்றி கொடுக்க ஒரு தளம் உள்ளது.
நம்மிடம் உள்ள டாக்குமெண்ட் கோப்புகளை சில சமயங்களின் ஓன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது பல பேர் அதை அப்படியே கொப்பி எடுத்து எந்த அனுமதியும் பெறாமல் தங்களின் தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
முக்கியமான கோப்புகளை படங்களாக இனி எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் திரையில் View என்று இருப்பதை சொடுக்கி, நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை படங்களாக பார்க்கலாம். இந்த படத்தின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணணியில் JPG படங்களாக சேமிக்கலாம்.
வேர்டு, எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை நாம் இந்த முறையில் எளிதாக படங்களாக மாற்றலாம்.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com