புதன், 4 ஜனவரி, 2012

Posted on 7:18 PM by piragasart


VLC மீடியா பிளேயரின் தோற்றத்தை மாற்றுவதற்கு

VLC தோற்றத்தை புதுப்போலிவுடன் பெற்றுக்கொள்ளலாம்
முதலில் இந்த தளத்திற்கு http://www.videolan.org/vlc/skins.php செல்லுங்கள். இங்கு சுமார் 150க்கும் அதிகமான VLC தோற்றங்கள் இருக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தோற்றத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்த தோற்றத்தின் மீது கிளிக் செய்தால் அந்த தோற்றம் பெரியதாக காட்டும், அதில் உள்ள download லிங்கை அழுத்தி அந்த டிசைனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது அனைத்து தோற்றங்களும் வேண்டுமென்றாலும் அதனையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் தரவிறக்கம் செய்த .vlt கோப்பை(ZIP கோப்பாக இருந்தால் Extract செய்து கொள்ளுங்கள்) CUT செய்து C:Program filesVideoLanVLCSkins என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும். நீங்கள் VLC பிளேயரை வேறு டிரைவில் நிறுவி இருந்தால் C க்கு பதில் அதை தெரிவு செய்து கொள்ளவும்.
சரியான இடத்தில் பேஸ்ட் செய்ததும் அதை அந்த விண்டோவை மூடி விடுங்கள். இப்பொழுது VLC மீடியா பிளேயரை ஓபன் செய்யுங்கள். அதில் Tools ==> Preferences என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும், அதில் SKIN பகுதியில் CUSTOM SKIN என்பதை தெரிவு செய்து நீங்கள் முன்பு பேஸ்ட் செய்த உங்களுக்கு விருப்பமான .vlt  கோப்பை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
vlt கோப்பை தெரிவு செய்யும் பொழுது already exit என்ற எச்சரிக்கை செய்தி வந்தால் அதில் Yes என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான தோற்றத்தை தெரிவு செய்தவுடன் கீழே உள்ள Save என்பதை அழுத்துங்கள்.
இப்பொழுது உங்கள் VLCமீடியா பிளேயரை க்ளோஸ் செய்து விட்டு மறுபடியும் ஓபன் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய தோற்றத்திற்கு VLC மீடியா பிளேயர் மாறி இருக்கும்.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com