செவ்வாய், 3 ஜனவரி, 2012

Posted on 1:12 AM by piragasart


ஒன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள. 
நாம் இணையத்தில் உலாவரும்போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல்படும். ஆகவே ஒன்லைனில் நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்வது என்று இங்கே காணலாம். இதற்கு நிறைய தளங்கள் உள்ளன. இன்று நாம் பார்க்க போகும் தளம் சிறந்ததாக உள்ளது.
இந்த தளத்திற்கான லிங்க் www.speed.io இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல வின்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்அடுத்தது கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும்.முடிவில் உங்கள் கணினியின் PING (Packet Internet Gropping)அளவை பரிசோதிக்கும்.
முடிவில் உங்கள் கணினியின் IP முகவரி, மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிரோட்பான்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விபரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.
உங்கள் கணினியின் இணைய வேகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முடிவு வரும்.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com