சனி, 17 மார்ச், 2012

Posted on 10:26 PM by piragasart


நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்காணிப்பதற்கு

உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து வைத்திருக்கும். அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்:
Record Each Keystroke: கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.
Instant Chat Messages Recording: பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
Track Emails: கணணியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.
Monitor Websites: கணணியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது.
Review Every Downloaded File: தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
கூகுளின் புதிய டேப்லெட்

கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவருகிறது. இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இந்த டேப்லெட்டை 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.
கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இந்த டேப்லெட் இயக்கும் சக்தி கொண்டது.
கூகுள் இந்த டேப்லெட்டைத் தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.
ஆனால் இறுதியில் இப்போது ஆசஸிடம் கூட்டணி வைத்திருக்கிறது.
இந்த புதிய டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com