சனி, 31 டிசம்பர், 2011

Posted on 8:23 PM by piragasart


பேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

இது உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.
 இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.
Chat messanger மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணணியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம் மற்றும் உடனுக்குடன் notifications காணலாம்.
இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணணிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.
இதற்கு முதலில் இந்த Facebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்கம் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும், அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும்.


No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com