செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

Posted on 7:51 PM by piragasart


பேஸ்புக்கிலும் வருகிறது Angry Birds விளையாட்டு இலவசமாக


கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல வெர்சன்கள் வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வர இருக்கிறது. வரும் காதலர் தினத்தன்று பேஸ்புக்கில் Angry Birds விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழலாம்.

மொபைலில் விளையாடும் Angry Birds விளையாட்டை விட பேஸ்புக்கில் வரப்போகும் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் ட்ரெயிலர் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 
 
Angry Birds விளையாட்டின் Angry Birds Facebook Page சென்று Like செய்தால் இந்த விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்க்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
இனி நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே Angry Birds விளையாட்டை விளையாடி மகிழலாம். 

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com